today

Monday, 24 February 2014

மெளனத்திற்குப்பின்

நீண்ட இடைவெளிக்குப்பின் வெட்ட வெளிப்பயணம்

நான் நீண்ட காலமாகவே மெளனத்தில் இருந்து விட்டேன்.  இடையில் சதுரகிரி பயணம் என் உடலோடு தான் சென்றேன் பின்னர் எனது ஆத்துமாவை மட்டும் அங்கு அனுப்பி அவ்வப்போது தரிசனம் செய்து வருகின்றேன்.  பயப்பட வேண்டாம் உயிரை மட்டும் அங்கு அனுப்பி நினைவினால் தரிசனம் செய்தல். உதாரணமாக மனக்கோவில் கொண்ட மாணிக்கம் என்ற கதையினைப்போல்தான் இதுவும்.  மனதினால் தரிசனம் செய்தல்.
சில மாதத்திற்கு முன் ஒரு சாதுவை சந்திக்க நேர்ந்தது. அவர் திருமணம் செய்ய வில்லை வயது 50 தாண்டிவிட்டது. ஆனால் அவருக்குள் தேடுதல் மிக அதிகமாகவே இருந்தது இன்னும் அவர் அடையவில்லை என்பதை அவரது கண்ணின் கருவிழி காட்டியது. பேருந்து பயணத்தின் போது என்னுடன் பேச்சுக்கொடுத்தார்.  டவுன்ஹாலில் ஏறி பேரூர் கோவில் வரை வந்தார். எனது கிருக்கனைப்போன்ற  தோற்றம் (வயது 42 தான் ஆனால் 65 வயதைப்போன்ற தோற்றம்), கையிலே கிழிந்து உருட்டி தையல் போடப்பட்ட ஒரு அழுக்கான துணிப்பை, எனது எம்.பீ.ஏ, படிப்பின் அகம்பாவமற்ற கண்கள் குழந்தையைப்போன்ற வெகுளித்தனம் எதையும் சட்டைசெய்யாது சிவனே என்று சன்னலில் சிறுபிள்ளைத்தனமாக வெறித்த பார்வையுடன் வேடிக்கை பார்த்து வந்ததையெல்லாம் கவனித்து விட்டு  தம்பி ஏதேனும் தங்களுக்கு உடல்நிலை சரியில்லையோ என்று பேச்சை ஆரம்பித்தார் நான் சற்று சிரித்துவிட்டு சொன்னேன்.  ஆமாம் நான் மனநிலை பாதிக்கப்பட்டவன், எனது கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு சில ஆண்டுகளாக என்ன நடந்தது என்றே தெரியாது கிறுக்கனாய் ரோடு ரோடாக அலைந்தேன் பல மாதங்களாகவே சாப்பிடாத காரணத்தினால் உடல் மெலிந்து போய் நினைவிலே மட்டும் உயிரோடு இருந்தேன் என்ன சாப்பிட்டேன் எங்கு இருந்தேன் என்ன உடுத்தினேன் என்பதெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. இறுதியில் எனது தகப்பனார் நான் பாபநாசத்திலே (நெல்லை மாவட்டம்) ஒரு பாறையில் படுத்திருப்பதைப்பார்த்துவிட்டு என்னை அழைத்துச்சென்று மனநல மருத்துவமனையில் சேர்த்து இரண்டு மாத காலம் தொடர்ந்து தூக்க மாத்திரையும் எப்போதெல்லாம் விழித்தேனோ அப்போதெல்லாம் சோறும் கொடுத்து என்னை சுயநினைவிற்கு கொண்டுவந்தார். மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றேன். அப்படியென்றால் உடலை மறந்தவன் என்று சொல்லுங்கள். உடலை ஏதேனும் ஒருவகையில் மறப்பது அல்லது பற்றற்றிருப்பது தான் ஞானத்தின் முதல் படி.என்றார். ஆமாம் இதுவும் சரிதான் என்றேன். அதற்காக எல்லோரும் கிருக்கனாக ஆனால் தான் ஞானம் கிடைக்கும் என்பதல்ல. ஞானம் என்பது பெறும் சரக்கல்ல அல்லது எங்கோ கிடைக்கும் சரக்கல்ல ஏற்கனவே ஞானம் இருக்கின்றது அதை நாம் புரிந்து கொள்ளல்தான் ஞானம் அடைவது. என்றேன்.

ஏதோ உங்களிடத்தும் சிறிது சரக்கு இருக்கு போலிருக்கிறதே என்றார். ஒரு புன்னகை மட்டுமே எனது பதிலாக இருந்தது. உங்களைப்பற்றி கூறுங்கள் என்றேன். நான் பெரிய பணக்காரன் சொத்துகளுக்கு இரண்டே வாரிசு நானும் எனது, அண்ணனும் அண்ணன் இப்போது இறந்துவிட்டார், நான் எனது 24 வயதில் பெண் சபலம் காரணமாக வீட்டை விட்டு ஓடி பாம்பேயில் பல ஆண்டுகள் விபச்சாரிகளோடு காலம் கழித்து வந்தேன். வித விதமான உடல் எடை கொண்ட பெண்களோடு இரவிலே படுத்து விடியும் வரை அவளோடு உறவில் இருப்பேன் விடிந்ததும் அவளிடம் பெற்ற இன்பம் இன்னதாக இருந்தது என்ற அனுபவம் மறந்து போய்விடும் மீண்டும் அவளையே விலைக்குப்பேசி ஒருவாரம் வைதிருப்பேன் மீண்டும் ஞாபகம் மறந்துவிடும் இவ்வாறு தொடர்ந்தது இறுதியில் சலிப்பு ஏற்பட்டுவிட்டது.  எந்த உழைப்பும் கிடையாது அண்ணன் ஏடிஎம்மில் பணம் போட்டுவிடுவார் நான் எடுத்து செலவழிப்பேன். நன்றாக அனைத்தையும் சாப்பிடுவேன் மது, கஞ்சா, எல்லாவிதமான போதைப்பொருட்கள் எல்லா கெட்ட பழக்கங்களும் பழகியிருந்தேன். இறுதியில் எல்லாவற்றிலும் ஒன்றுமில்லை என்பதை எனது ஆத்ம பூர்வமான அனுபவத்தால் உணர்ந்தேன். பின் எல்லா சாமியார்களையும் சென்று பார்க்க ஆரம்பித்தேன். ஏதோ எனக்கு தெரிந்த மார்க்கத்தில் இப்போது அமைதியைத்தேடி அழைகின்றேன்.  மன அமைதியும் நிம்மதியும் எங்கும் எனக்கு கிடைக்கவில்லை இப்போது புனித யாத்திரையில் இங்கு வந்துள்ளேன்.  நான் இப்போது அனாதை இனி எனது அண்ணனிடமிருந்து பணம் ஏதும் வராது நான் ஒருவன் உயிருடன் இருப்பதையே அண்ணன் குடும்பத்தாரிடம் இருந்து மறைத்துவிட்டார்  காலங்களும் ஓடிவிட்டன இப்போது பிச்சைமட்டுமே எடுத்து வயிற்றுப்பிழைப்பை பார்க்கவேண்டியுள்ளது ஆனால் ஒன்று எனது இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில் எல்லாம் அனுபவித்து விட்டேன் எதிலும் ஒன்றுமில்லை என்பதை நான் இப்போது உணர்ந்துவிட்டேன் எல்லாம் சிறிது நேர ஞாபகம் அதனால் ஏற்படும் சந்தோசம் தான்' மனம்'  தான் எல்லா மாய வேலைகளையும் செய்கிறது இதில் அதில் ஏதோ இருப்பதாக மனம் சொல்லிக்கொடுக்கிறது அதனையும் ஏமாந்து நாம் அதன் வழியில் சென்று வீணாய்ப்போய் இறுதியில் மனத்தை அடக்கவும் அமைதிப்படுத்தவும் எங்கெல்லாமோ போய் வருகின்றோம் அங்கும் ஏது மில்லை இதற்கும் அப்பால் ஏதோ ஒன்று உள்ளது என்பதை உள்ளிருந்து ஆத்மா சப்தமிடுகின்றது அதனைத்தேடித்தான் இப்போது அழைகின்றேன் என்றார்.
அடச்சீ இவ்வளவு நேரம் ஒரு பிச்சைக்காரனிடமா, எய்ட்ஸ் நோய் உள்ளவனிடமா பேசிக்கொண்டு வந்தோம் என்று மாயா லோகத்திலிருந்து ஒருசப்தம் அகம்ஹாரத்தை கேட்டது எனது குருநாதர் இடைமறித்து 'அன்போடிரு' என்று ஆசீர்வதித்தது இப்போது ஞாபக்த்துக்கு வந்தது.  ஒரு மானிடநிடத்தில் அன்போடும் கருணையோடும் இருப்பதே ஆன்மீகம்.  அவரது பிறவி இரக்சியத்தை என்னிடத்தில் கூறிவிட்டார்.  நான் எனது குருநாதரைத்தியானித்தேன். அவர் அப்போது புன்னகையுடன் நானும் உன்னோடுயிருந்து அவன் பேசியதைக்கேட்டேன் என்றார். அவனுக்குத்திருவாசகத்தை பற்றிக்கூறிவிடு என்றார் அசரீரியாக. உடன் கோவிலில் இருந்த பெட்டிக்கடையில் 'திருவாசகம்' புத்தகத்தை வாங்கி அதில் 'அன்போடிரு' என எழுதி அவரிடத்தில் கொடுத்து இதை நன்றாக வாசியுங்கள் அய்யா என்றேன் படிக்காதீர்கள் மனதினுள் அமைதியாக வாசியுங்கள் என்றேன். அவர் அதில் ஏதோ எழுதினீர்களே என்ன என்று முதலில் அதைப்பார்த்தார். 'அன்போடிரு' என்று சத்தமாக வாசித்தார். அவருக்கு அழுகையை அடக்கமுடியவில்லை கண்ணீர் சிந்தினார் 'அன்போடிரு' என்று அழுத்திச்சொன்னார்.  இப்பிரபஞ்சத்தின் மிகப்பெரிய ஞானமையா இந்த வார்த்தைகள், அன்பு எங்கும் கிடைப்பதில்லை அன்பை நாம் பிற உயிர்களிடத்தில் காட்டினால் போதும் இப்பிரபஞ்சமே அன்பைப் பிரதிபலிக்கும் என்றேன் நான். அன்பு சகலத்தையும் சகிக்கும்.  ஆசையே துண்பங்களுக்குக்காரணம் என்று சொன்ன புத்தனுக்கும் இவ்வுலகில் எல்லோரும் அன்பொடிருக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. என்றேன். அய்யா சாப்பிட்டீர்களா என்றேன் இல்லை கிடைத்தால் மட்டும் சாப்பிடுவேன் என்றார் அவருக்கு 20 ரூபாய்க்கு 4 இட்லி வாங்கிக்கொடுத்தேன்.  இப்பிரபஞ்சம் சம்மதிதால் மீண்டும் சந்திப்போம் என்று சொல்லிவிட்டு பேரூர் பட்டிலிங்க சிவனை தரிசனம் செய்து கோவிலை வலம் வந்து எப்போதும் தியானம் செய்யும் இடத்தில் இருந்துவிட்டு வந்தேன். அந்த பெரியவரைப்பார்த்தேன் காணவில்லை அவர் இனி எங்குமிருப்பவர் ஏனெனில் அவர் அநாதை இப்போது அவருக்கு இந்த பூமியே சொந்தம் அவரின் காலுக்க்குக்கீழ் இருப்பன அனைத்தும் அவருக்குச்சொந்தம். எனது குருநாதரின் திருவாசக தீட்சை மூலம் அவர் ஞானப்பசி தீர எனது குருநாதரையும் தியானித்திருந்தேன்.  திருவாசகத்தில் அப்படி என்னதான் இருக்கிறது எனது குருநாதரின் விளக்கம் அடுத்த பயணத்தின் போது. அதுவரை மட்டும் 'அன்போடிருங்கள்'.

Sunday, 6 January 2013

விஸ்வ ரூபம்

விஸ்வ ரூபம்

நானும் எனது குடும்பத்தாரும் துணிக்கடைக்குச்சென்று இருந்தோம் எனது மகன் வாங்கிய துணியை போட்டுப்பார்க்க கடையிலிருக்கும் துணி மாற்றும் அறைக்குச்சென்றான். நான்கு புறமும் கண்ணாடியாலான(முகம் பார்க்கும்) அறை அது, இது வரை அதைப்போன்ற அறையை அவன் பார்த்ததில்லை. மிகுந்த பிரமிப்போடு என்னிடம் கேட்டான் அப்பா என்ன இது ?  இங்கு இத்தனை உருவங்கள் தெரிகிறதே அத்தனையும் நானாகவே தெரிகிறேன் ! நீங்களும் இத்தனை பேராக தெரிகிறீர்களே ! என்ன ஒரு அதிசயம் இதை எல்லாரிடமும் சொல்லவேண்,  என்றான். இரண்டாம் வகுப்பு படிக்கின்றான்- விஷ்ணு,  இது தான் விஸ்வரூபம் என்றேன் நான். விஸ்வரூபம் என்றால் என்ன அப்பா என்றான் ஆன்மீகத்தின் மிக உயர்ந்த ஞானமுடைய பார்வை அது. அது இதுதான். இதனை சரியாக புரிந்து கொண்டால் எல்லாம் கிட்டிவிடும். எப்போதும் போல புரியாதது மாதிரியே பேசுகிறீர்களே ? அப்பா என்றான். அப்பாவுக்கு அப்படிப்பேசியே பழக்கமாகிவிட்டது ! உனக்குத்தெரியவருகின்றபோது தெரிந்துவிடும். அது வரை நீ காத்திருக்கவேண்டும். நான்  இங்கு இருந்து சிரித்தால் ஆயிரமாயிரம் பேரும் சிரிக்கின்றார்கள் அத்தனையிலும் என்னைப்போன்றே இர௮௮ின்றார்கள் கண்ணாடியில் தெரிந்த வரிசையான பிம்பங்களைப்பார்த்து அதிசயித்து போனான் எனது மகன். இதில் மிகுந்த இரகசியம் உண்டு இதற்கு முந்தைய பிறவியிலும் இனி வருகின்ற பிறவியிலும் இத்தனை நபர்கள் நம்மைப்போன்றே எந்தத்திசையிலும் ஆயிரம் ஆயிரமாய் அனைத்தும் பிம்பங்களாய், மரணத்தை நோக்கிய பயணத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். எப்போது மரணமோ  ? "மரணம் எல்லாவற்றையும் எடுத்துச்சென்று விடும்"" அப்போது எல்லாம் முடிந்துவிடும். அனைத்தும் இல்லாமல் போய்விடும். அப்போது உண்மையான விஸ்வரூபமான வெட்டவெளிக்குள் நாம் பிரவேசிப்போம்.

சகலமம் யாம் யாவையும் யாம் என்றார்  - பகவான் ஸ்ரீ கிருஸ்ணர்.

நீங்கள் எங்கிருந்து எதைப்பார்த்தாலும் அது கிருஸ்ணனைத்தான் பார்க்கிறீர்கள் அப்படியானால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் கிருஸ்ணாவுக்குள் தானே. அப்படியானால் நீங்களும் கிருஸ்ணாதானே. கிருஸ்ணா கிருஸ்ணாவிலேயே அடக்கம். அதைத்தான் இந்த மாய பிம்பங்களின் வழி நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.

எனது மகன் யார் ? கிருஸ்ணா, நான் யார் நானும் கிருஸ்ணா, யாரிடம் துணி வாங்கினேன், கிருஸ்ணாவிடம் வாங்கினேன். யாரிடம் பணம் கொடுத்தேன் கிருஸ்ணாவிடம் கொடுத்தேன். கடைக்காரர் யார் அவரும் கிிுணாதான், அங்கு பாத்ரூம் கழுவியது யார் அவரும் கிருஸ்ணாதான். வெளியிலே செக்யூரிட்டியாக நிற்பது யார் அவரும் கிருஸ்ணாதான். எங்கு பார்த்தாலும் கிருஸ்ணா எதிலும் கிருஸ்ணா, யாரும் கிருஸ்ணா யாவையும் கிருஸ்ணா. எச்சரிக்கை, "கிருஸ்ணனிடம் நீங்கள் அன்பு வைத்தால் யாவற்றிலும் அன்பு வைக்கவேண்டியது வரும்" வேற்றுமை என்பது இல்லாமல் போய் வெற்றிடம் வந்து விடும். பின்னர் என்ன வெட்டவெளி இரகசியம் உங்களுக்கு கிட்டிவிடும்.

இதில் சரியான புரிதல் வேண்டும்.

பகவத்கீதைக்கு உறை எழுதி தன் பெயரை முன் அட்டையில் மொழிபெயர்ப்பு என்று பல ஆயிரம் ப௮ேர் ததங்களின் புகழுக்கு வித்திட்டாலும் 25 வது வயதில் ஆரம்பித்து 64 வது வயதில் மொழிபெயர்ப்பை முடித்து தன் வாழ் நாளையும் முடித்துள்ளார்கள் - அவர்களின் ஆத்மாவும் இதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.

கிருஸ்ண லீலையின் புரிதல் - ஒரு பெண் அல்லது ஒரு ஆண் உங்களை மயக்கும் அளவுக்கு உட்படுத்தினால் அங்கு கிருஸ்ணா தன் லீலையை காண்பிக்கின்றார் என்று அர்த்தம், புரியவில்லையா இங்கே மயக்குபவனோ அல்லது மயக்குபவளோ மற்றும் மயங்கு பவனோ அல்லது மயங்கு பவளோ - இருவரும் கிருஸ்ணாதான்.  அதாவது தன்னையே பார்த்து இன்புறுவது. ஆண் பெண் என்னும் உருவ வேற்றுமையுள்ள பிம்பங்கள் தன்னையே பார்த்து இன்புறுகின்றன.

கிருஸ்ணாவுக்கு ஏகப்பட்ட கோபிகைகளோடு உறவு ஆயிரமாயிரம் மனைவிகள் அவன் ஒழுக்கமற்றவன் என்று பிற மதத்தினர் சரியான புரிதல் இன்மையினால் குறை சொல்வதுண்டு இப்போது சொல்கிறேன் உனது மனைவியும் கிருஸ்ணாவின் மனைவிதான் உனது தாயும் கிருஸ்ணாவின்  மனைவிதான் அப்படி என்றால் என்ன அர்த்தம் - நீயும் உனது தந்தையும் கிருஸ்ணாவின் மறு உருவங்கள் தான்.  புரியவில்லையா கோபம் வருகின்றதா - நீதானையா கிருஸ்ணா, கிருஸ்ணா கிருஸ்ணாவிற்குள் அடக்கம் அவ்வளவு தான்.

நான் பேருந்தில் ஏறுகின்றேன் யார் ஓட்டுகின்றார் கிருஸ்ணாதான் ஓட்டுகின்றார் யார் டிக்கட் கொடுப்பது கிருஸ்ணாதான் டிக்கட் கொடுக்கிறார். ஆண் பெண் பயணிகள் யாவரும் கிருஸ்ணாதான்.  பயணம் கிருஸ்ணாவிற்குள், பயணித்தது கிருஸ்ணா. இந்த பூமி கிருஸ்ணா இந்த கிரகங்கள் அதுவும் கிருஸ்ணா.  இவை அத்தனையையும் ஒட்டுமொத்தமாக உனது மனக்கண் முன்னே நீ பார்ப்பது தான் விஸ்வரூப தரிசனம்.  நீ எங்கிருந்து தியானம் செய்கிறாயோ அந்த இடமும் அங்கு நீ அமர்ந்து தியானம் செய்வதும் உனக்குத்தெரிய வேண்டும் அதாவது உன்னையே நீ மனத்திரையில் காண வேண்டும் இது தான் விஸ்வரூபம். - தியான தரிசனம்.

சரியான புரிதல் இருந்தால் யாவரும் விஸ்வரூப தரிசனத்தை சில நொடிப்பொழுதில் காணலாம்.

எனது குருநாதர் எப்போது ஆசீர் வதித்தாலும் "அன்போடு இரு" என்றே ஆசிர்வதிப்பார். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார் 'என்னை ஞானவான், ஞானி, எல்லாம் அறிந்து உணர்ந்தவன் என்று சொல்வதைக்காட்டிலும் ' "அன்போடு இருந்தவன்" என்றே சொல்வதில் தான் மிகப்பெரு மகிழ்வு உண்டு.  உன்மையான ஞானம் சகலத்தையும் ஏற்றுக்கொண்டும் சகித்துக்கொண்டும் அன்போடிருத்தல் தான். இறுதியான உண்மையும் இறுதியான ஞானமும் இதுதான்.  'அன்பே சிவம்' நான் அன்போடிருக்க சிவம் எல்லாவற்றையும் எனக்க்தரவேண்டும அன்போடிருக்க பழகவேண்டும்.  வெறுப்புணர்ச்சியும் ஒரு வன்முறைதான் எனவே வெறுப்புணர்ச்சி கொள்ளாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும்.  வெறுப்புணர்ச்சி தலைதூக்கும் போது உனது மனத்தில் நீ 'நான் எப்போதும் அன்போடிருப்பவன்' என்ற நினைவு ஒன்று இருந்தால் போதும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். அன்பு மயமான அந்த சிவன் உன்னுள் புகுந்து நீயும் சிவனாவாய்.  எவன் ஒருவனுக்கு கோபமும் வெறுப்புணர்ச்சியும் வருகின்றதோ அப்போதே அவன் 'ஆன்மீக வாதி ' என்று தன்னைச்சொல்லிக்கொள்ள இலாயக்கற்றவன்.  எப்போதும் அன்போடிருப்பம் மட்டுமே ே ்மீக வாதியாக தகுதிஉள்ளவன்.  எப்போதும் அன்போடிருக்கப்பழகு அது ஒன்றே இப்போதைய தவம்.  தினமும் காலையில் எழுந்த உடன் இன்று ஒரு நாள் மட்டும் நான் 'அன்போடு இருப்பேன்' என்று உனது மனதிற்கு உத்தரவு கொடு. விரைவில் அன்பு மயமான அனைத்து தெய்வங்களின் அருளும் உனக்கு கிடைப்பதோடு மட்டுமின்றி 'நான் கடவுள்' என்ற பரம இரகசியத்தினை "தன் உணர்வினால்",  நீ உணர்வாய் "அன்போடிருந்தால் மட்டுமே".

.  "கடவுள் தன்மை அன்பிலே மட்டும் தான் உண்டு". எனவே சரியான புரிதலோடு ' அன்போடு இருக்க பழகவும்'.

உன்னை மூன்று முறை ஆசீர்வதிக்கின்றேன்
அன்போடு இரு
அன்போடு இரு
அன்போடு இரு


இன்றைய பயணத்தில் இவ்வளவு போதும்.

Saturday, 5 January 2013

உலகம் அழியுமா

நான் எப்போது அழிகின்றதோ அப்போது இந்த உலகம் அழியும்.  நான் என்பது என்ன எனது அகங்காரமா ? அல்லது நானா, நானா என்றால் உடலும் உயிரும் சேர்ந்த ஒன்றா? தனி மனிதன் எப்போது அழிகின்றானோ அப்போது அவனுடைய உலகம் மட்டும் அழியும் அவ்வளவுதான் இதன் இரகசியம். ஒவ்வொரு உயிருக்கும் தனித்தனி உலகம் அவரவர் பார்வையில் அவரவர் உலகம். அவர்கள் எவ்வாறு நினைக்கின்றனரோ அவ்வாறே இந்த உலகம் பிரதிபலிக்கின்றது.  அழிவது எல்லாம் மீண்டும் பிறக்கும். அழிவது பிறப்பதற்குத்தான் பிறப்பது அழிவதற்குத்தான்.

Saturday, 17 December 2011

எப்போதும் தியானத்திலிருத்தல் என்றால்

எப்போதும் தியானத்திலிருத்தல் என்றால்

எனது குருநாதரின் வாக்கில் அடிக்கடி அவர் சொல்வது எப்போதும் தியானத்திலிரு. இதை என்னால் நீண்ட காலங்களாகவே புரிந்துகொள்ள இயலவில்லை. குருநாதரிடமே கேட்டுவிட்டேன்.  அப்போது அவர் தந்த விளக்கம் இதோ.

நான் தவறாக புரிந்து கொண்டது.

அதிகாலையில் எழவேண்டும் பின் காலைக்கடன்களை முடித்து விட்டு குளித்துவிட்டு. ஆன்மீகவாதி போல வேஷமிட்டுக்கொண்டு (காவி வேட்டி, துண்டு, ருத்ராட்சம், நெற்றிநிறைய விபூதி மனம் நிறைய நிறைவேராத ஆசைகள் ) உள்ளே கோபம் வெளியே மிகுந்த அமைதி) கண்களை மூடி உட்கார்ந்து கொண்டே தூங்க வேண்டும் அவ்வப்போது சவம் போல் படுத்துக்கொள்ளவேண்டும். பசி எடுத்தால் நேரத்திற்கு சாப்பிட்டுக்கொண்டு வந்து விட வேண்டும். யாரிடமும் பேசவே கூடாது மெளனவிரதம் போல் இருந்து கொள்ளவேண்டும் மொத்தத்தில் சோம்பேறியைப்போல் இருக்கவேண்டும் அவ்வளவு தான் இது எத்தனை நாளைக்குத்தான் இருப்பதோ இதுவும் அலுப்பு தட்டிவிடும் இறுதியில் அங்கங்கு இரத்தம் கட்டிவிடும் மிக உயர்ந்த சுட்ட சோம்பேறி போல் ஓர் வாழ்க்கை என்றுதான் நான் நினைத்தேன். இந்த சோம்பேறிகளால் இவனுக்கும் பிரயோசனமில்லை வெளி உலகிற்கும் பிரயோசனமில்லை.  கடவுளிடம் ஆசையோடு எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று மன ஆசைகளைநிறைவேற்ற பிரார்த்தனை வேறு செய்ய வேண்டும்.  ஆசைகள் நிறைவேறா விட்டால் கடவுளைத்திட்ட வேண்டும் ஆள் பார்த்து கடவுளும் நடந்துகொள்கிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.  முடிந்தால் ஒரு வாரத்திற்கு ஒரு கடவுளை மாற்றிகொள்ள வேண்டும்.  முடிவினில் சாமியுமில்லை சாத்தானுமில்லை ஆசையே மிஞ்சி வெட்டவெளிக்குக் குறைபாட்டோடு கொண்டுசென்றுவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

குருநாதரின் விளக்கம்.

மனம், சொல், செயல், புத்தி மூன்றும் சேர்ந்து கொண்டு எதைச்செய்தாலும் அது தியானம் அவ்வளவுதான்.
மேலும் தினசரி வாழ்வில் எப்படி தியானத்தைக்கடைபிடிப்பது என்றால் முதலில் காலை எழுந்துவிட்டோம் என்ற உணர்வு வரவேண்டும். பின்னர் மூச்சினைக்கவனிக்க வேண்டும் வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா என்று கவனித்தால் சற்று இளைப்பு வரும் மூச்சு சரியாக வராது சற்று நேரம் யோசிக்க வேண்டும் நெஞ்சு படபடக்கும். பின்னர்தான் தெரியும் எந்தப்பக்கமாக நாசித்துவாரத்தில் காற்று உள்வந்து வெளி செல்கிறது.  இதுதான் முதல் தியானம் யாவருக்கும்.

அடுத்து காலைக்கடன்களை முடித்தல் இதிலும் முழு ஈடுபாட்டோடு மிகக்கவனமாக மிக மெது வாக எது வெளியேறுகிறது என்பதனைக்கவனிக்கவேண்டும் எல்லாவற்றையும் மிக மெது வாக செய்தால் போதும் எந்த அவசரமும் வேண்டாம்.  நேரம் மிக மெதுவாகவே கழிய வேண்டும் இது மிகவும் முக்கியம்.  மூச்சு சீராக இருக்கவேண்டும்.  அடுத்துக்குளிப்பது மிக மெதுவாக குளிக்கவேண்டும் நீங்கள் வீட்டிலோ அல்லது ஆற்றிலோ குளிக்கலாம் ஆனால் நீரின் ஸ்பரிசம் முழுவதையும் உணர்ந்து குளிக்கவேண்டும்.  நீங்கள் விடும் நீர் எந்தக்காரணத்தைக்கொண்டும் வீனாக வெளியே சிந்திவிடக்கூடாது. இங்கும் மூச்சுக்கவனிக்கப்படவேண்டும், மிகவேகமாக மூச்சினை வெளியேற்றவோ உட்புகுத்தவோ கூடாது. எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

அடுத்து அவரவர் இஷ்ட தெயவத்தை வணங்குதல் இங்கும் மூச்சு கவனிக்கப்பட வேண்டும் எந்த அவசரமும் வேண்டாம் மிக நிதானமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பூசையறையில் இருக்கும் பொருட்களை மிக மெதுவாகவும் கவனமாகவும் கையாள வேண்டும்.

அடுத்துக்காலைச்சாப்பாடு மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

அடுத்து அமைதியாக அமரவேண்டும் எண்ணங்களின் அலைகளைக்கவணிக்க வேண்டும் இங்கும் மூச்சு சீராக இருக்க வேண்டும். அடுத்து அவரவர் பணிகளைச்செம்மையாக ச்செய்யவேண்டும் உத்தியோகம் புருசலட்சணம் எனவே அவரவர் தத்தமக்கு விதிக்கப்பட்ட கடைமைகளை செவ்வனே செய்ய வேண்டும் மிக மெதுவாக கவனமாக மூச்சினை கண்ட்ரோல் செய்து கொண்டே செயலும் புத்தியும் ஒருங்கே இருந்து பணியாற்ற வேண்டும். நாம் செய்யும் செயல் எதுவோ அதில் மிகுந்த கவனமும் அக்கறையும் ஈடுபாடும் அன்பும் கொண்டிருக்க வேண்டும். எந்த வித எரிச்சலோ கோபமோ இதர தேவையற்ற எண்ணங்களோ எழாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.  எந்தப்பணியினைச்செய்தாலும் அவசரம் வேண்டவே வேண்டாம் மிக மெது வாகச்செய்தால் போதும் மூச்சு சீராக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது கவனித்துக்கொள்ளல் வேண்டும். மூச்சினைக்கண்ட்ரோல் செய்ய அவ்வப்போது வெளிக்காற்றை நன்றாக அதிகமாக உள்ளிளுத்து தொப்புள் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் வயிறு பலூன் ஊதியதைப்போல பெரிசாக ஆகி மிக மெது வாக காற்று இறங்குதல் போல மிக மெதுவாக காற்றினை வெளியேற்ற வேண்டும் உதாரணமாக பெருமூச்சு இடுவதைப்போல. இப்பொது சற்றே மூச்சு சீராக அமையும் இந்த முறையினை அவ்வப்போது செய்து வரவேண்டும்.  உடல் உஷ்ணம் அதிகமாகாமலிருக்க தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  தண்ணீர் அதிகமாகக்குடிக்ககுடிக்க சிறுநீர் அதிகமாக வெளியேறும் அதனையும் மிக மெதுவாக வெளியேற்றினால் போதும்.

அடுத்து மதிய சாப்பாடு மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

அடுத்து ஒரு முப்பது நிமிட ஓய்வு காலையில் நடந்த சம்பவங்களின் நமது பங்களிப்பு என்ன ? என்ன என்ன தவறுகள் நாம் செய்துள்ளோம்? என்பதை மனதால் அசைபோட வேண்டும் கண்கள் மூடியிருக்க வேண்டும், மிகுந்த மெளனத்தோடு இருக்க வேண்டும். மூச்சு நன்றாக கவனிக்கப்பட வேண்டும். ஒரு அமானுஷ்ய அமைதிகிடைக்கும் பின் மதிய பணிகளை கவனிக்க வேண்டும்.  மிக முக்கிய மாக எந்த பணியினையும் நாளையென்று  தள்ளிப்போடக்கூடாது எல்லா பணிகளையும் அன்றே முடித்து விட வேண்டும். நாளைஎன்பது புதிதாய்த்தான் பிறக்க வேண்டும்.

அடுத்து மாலை டிபன் காபி டீ மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் ஒரு குளியல் அல்லது சுத்தமாக இருக்க கைகால் முகம் கழுவி முடிந்த வரை சிறு ஒப்பனை கண்ணாடிமுன் நின்று நம்மை நாமே ரசிப்பது இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.  இங்கும் மூச்சு கவனிக்கப்பட வேண்டும்.

அடுத்து குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் குழந்தைகளோடும் அண்டை அயலாரோடும் சந்தோஷமாக அமைதியாக நல்லவற்றைக்குறித்து பேசி மகிழவேண்டும். இங்கும் மூச்சு கவனிக்கப்படவேண்டும்.  நீங்கள் எதைச்செய்தால் உங்களின் மனம் அமைதியாகுமோ சந்தோசப்படுமோ அதைச்செய்ய வேண்டும். டீவி பார்க்கலாம் சினிமாவுக்குச்செல்லலாம் அல்லது வேறு ஏதாவது செய்யலாம் உங்களின் இஷ்டத்திற்கு. மொத்தத்தில் நீங்கள் சந்தோஷமாய் அமைதியாய் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஆனால் மூச்சு கவனிக்கப்படவேண்டும். ஒரே சீராய் காற்று உட்புகுந்து வெளியேற வேண்டும் உங்களின் நாசி மூக்கு வழியே.

அடுத்து இரவு உணவு அதிக பட்சம் எண்ணெயில் முங்கிய உணவுவகைகளை இரவிலே தவிர்த்துவிட வேண்டும்.
மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

நீங்கள் எதைக்கவனிக்கிறீர்களோ அது அங்கு இல்லாமல் போய்விடும்.

ஒரு நாளை ஒருவருடமாக வாழ இதுவே வழிமுறை. இந்த தியானத்தினால் உங்களுக்குக்கிடைக்கும் முதல் பட்டபெயர் ஏய் எருமை மாடு ? ஏய் சோம்பேறி ? ஏய் தடியா ? போன்ற ஏக வசனச்சொற்கள் தான். அப்படியானால் இந்த தியானம் உங்களுக்குரியது உங்களுக்கு தியானம் சித்தியாகிவிட்டது என்று அர்த்தம்.  இதற்கு மற்றுமொரு பெயர் உண்டு எருமை மாட்டுத்தியானம். என்னை பலர் இவ்வாறு தான் திட்டுகிறார்கள் எனக்கு மிகுந்த பெருமையைத்தருகிறது இந்தச்சொற்கள். எல்லா ஒளிகளும் ஒலிகளும் சிவனே.  யாவும் அவனே அவன் சிவனே.  இவனும் சிவனே. அன்போடு இருங்கள் இன்று மட்டும்.  மகிழ்வாய் இருங்கள் இன்று மட்டும்.  நாளை என்பது எவனுக்கும் ஏன் சிவனுக்கும் இல்லை.

என்னைக்கண்டால் பலருக்கும் பொறாமை எரிச்சல் ஏன் என்றால் ? நான் அமைதியாக இருக்கிறேன்,  எதிலும் கலந்து கொள்வதில்லை, இருப்பது போதும் என்று இருக்கிறேன்.  எனக்குத் தேவைகளோ ஆசைகளோ கிடையாது.  எந்தத் தேவையும் ஆசையும் இல்லாதிருப்பதால் எனக்கு அலைச்சல்கள் இல்லை வியாதிகள் இன்றுவரை என்னை அண்டியது இல்லை.  எனக்கு நிறைய நேரம் இருக்கிறது எனது குடும்ப்த்தோடும் குழந்தைகளோடும் சுற்றத்தாரோடும் மிகுந்த அன்பாயும் அமைதியாயும் எந்தப்ப்கையும் இன்றி நன்றாய் வாழ்ந்து வருகிறேன்.  எனது தினசரி வருமானமே எனக்குப்போதும்.  எனக்கு எவ்வித ஆசைகளும் இன்று வரை இல்லை.  எனது சொத்து எனது தாய் தந்தையர் எனக்குக்கொடுத்த இந்த உடல் என்னும் சடலம் மட்டுமே. எனவே நான் எதையும் பாதுகாக்க வேண்டிய அவசியமுமில்லை.  எனது மூன்று மகன்களையும் எந்தக்குறையுமின்றி இறைவன் படைத்துள்ளான் அவர்களின் வாழ்வை அவர்களின் கை கால் கண் கொண்டு அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அவர்கள் பிறப்பிலேயே ஞானியாய்த்தான் பிறந்துள்ளார்கள் அவர்களுக்கும் எந்த வித ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் அடிக்கடி அவர்களிடம் ஆசைப்படாதிரு எதிர்பார்க்காதே என்று தான் சொல்லிவருகிறேன்.  அவர்களும் இப்போது பழகி வருகிறார்கள் வேறு வழியின்றி.  அவர்களது தகப்பனின் முயற்சியின்மை குறித்து நன்றாகவே அவர்களுக்குத்தெரியும்.

இன்றைய பயணத்தில் இவ்வளவு போதும்.


Friday, 18 November 2011

வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்

வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்

வெட்டவெளி என்பதைத்தான் உயிர், ஆன்மா, ஜீவாத்மா என்றெல்லாம் புரிந்துகொள்கின்றோம்.  உனது உயிரை உன்னால் பாதுகாக்க இயலுமா என்றால் அது முடியாத காரியம்.  எதையெல்லாம் உன்னால் பாதுகாக்க இயலாதோ அதை எல்லாம் அழிக்கவும் இயலாது. அப்படியானால் உனது உயிரை அழிக்கவும் முடியாது என்பது புரிகின்றதல்லவா.  இந்த சடலம் விரைவில் அழிந்துவிடக்கூடியது என்பது புரிந்துவிட்டது ஆனால் இந்த சடலத்தோடு கூடிய உயிர் என்ன ஆனது என்பதை யாரும் உணரவில்லை.  உயிர் பிரிந்து விட்டதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது.  உயிரை அழிக்க இயலாத போது அது வெட்டவெளியில் கலந்துவிடுகின்றது,  வெட்டவெளி என்பதே இந்த பிரபஞ்சம்.  இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமி என்னும் கோளில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.  ஏன் இந்தக்கோள் பூமியானது கூட இப்பிரபஞ்சத்திலே பயணத்தில் தான் உள்ளது.  மெய் என்பதன் பொருள் எப்போதும் இருக்கும் உண்மை.  அப்படியானால் வெட்டவெளி என்பது எப்போதும் இருக்கும் உண்மை என்பதை இதன் மூலம் உணரவேண்டும்.

இந்த சடலத்தில் உயிர் இருக்கும் வரை இந்த சடலத்திற்கு வியாதிகள் ஏதும் வரா வண்ணம் இதனை நாம் பராமரித்தல் அவசியம்.  அதிக பட்சம் நேரத்திற்கு சாப்பிட்டு வயிறை பட்டினி போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  எப்போதும் பசி என்னும் வியாதி நம்மை அண்டாமல் பார்த்துக்க்கொள்ளல் அவசியம்.  பசி என்பது இருப்பின் நமது மனம் பசியைக்குறித்தே கவனமாய் இருக்கும்.  பசியடங்கியபின் தியானத்தில் அமர்வது அவசியம்.  அளவுக்கு அதிகமாயும், அளவுக்குறைவாயும் உண்ணுதல் கூடாது.  அளவாய் பசி பொறுக்கும் அளவு உண்ணவேண்டும்.  நன்றாக சாப்பிட்டுவிட்டு தியாணத்தில் அமர்ந்ததும் தூக்கம் வரும் இதனைத்தான் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சிலேடையில் கூறியுள்ளனர். இதுவும் உண்மையே மயக்கம் வரும் ஆனால் அந்த கனத்தில் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்.  விழிப்புடன் இருப்பது என்றால் சாப்பிட்டவுடன் தூக்கம் வரும் ஆனால் நாம் தியானத்தில் இருக்கின்றோம் என்ற புரிதல்.  தியானம் என்றால் ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு இருப்பது அல்ல நமது பேச்சினை நாமே கேட்பது அதாவது நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பயித்தியக்காரத்தனமான சப்தங்களை , இரைச்சல்களை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்.  நாம் நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பேச்சைக்கேட்க்க ஆரம்பித்து விட்டோம் எனில் மாயாண்டியை நாம் கவனிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது மாயாண்டிக்குத்தெரிந்துவிட்டால் மாயாண்டி தனது இயல்பு நிலையான மிகுந்த அமைதிக்குத்திரும்பிவிடுவார். அது வரை அவர் இடும் கூச்சல்களும் , சப்தங்களும், இரைச்சல்களும் ஏராளம். நமது மனம் என்னும் மாயாண்டியை பேசாமலிருக்கச்செய்வதே இந்த தியானத்தின் வேலை.  மனம் அமைதியாகிவிட்டால் மற்றவை எல்லாம் கிட்டிவிடும்.  மாயாண்டியின் கட்டுப்பாட்டில் தான் நாம் அனைவருமே இயங்குகின்றோம்.  மாயாண்டியின் விளக்கம் -  மாயா + ஆண்டி (மாயா - மாயை என்னும் அலைக்கழிக்கும் சக்தி, ஆண்டி - சிவம் என்னும் தியான ரூபம் - அமைதியின் வடிவம்)  இருவேறுபட்ட நிலைகளின் சங்கம ரூபமே மாயாண்டி என்னும் மனம்.  சிலநேரங்களில் அமைதி பல நேரங்களில் குழப்பம் இதுவே மனம் என்னும் மாயாண்டியின் தத்துவம்.  நமது மாயாண்டியை சரணடைவோம் மாயா விழகி ஆண்டியிடம் வீழ்ந்து பற்றற்ற நிலை கேட்டு தவம் இருப்போம்.  தவம் என்பது கிடைக்கும் வரை காத்திருத்தல்.
அடுத்த பயணத்தின் போது சந்திக்கலாம்.

Wednesday, 16 November 2011

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

(பற்றற்றே சொல்கிறேன்) உன் மரணத்தருவாயில் இன்னும் சில மணித்துளிகள் கடந்து நீ இறந்து விடுவாய் என்பது தெரிந்தால் மிகுந்த சந்தோசத்தோடு இரு. இதோ உனக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்பதில் நம்பிக்கையோடிரு. மிகுந்த சிரமப்பட்டு இறக்காதே. அய்யோ நான் இறக்கின்றேனே. இந்த உலகத்து இன்பங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டுச்செல்கிறேனே என்று எண்ணாதே. எனது குடும்பம், குழந்தை, மனையாள், சொத்து, வாகனம், நண்பன், குரு நாதர், மேலும் பலவற்றைவிட்டுச்செல்கிறேன் என்று எண்ணவேண்டாம்.  எனக்கு முக்தி கிடைக்கும் அல்லது கிடைத்து விடும் என்ற பற்றோடு இராதே.  மரணம் என்பதின் இயல்பை நன்றாய் புரிந்துகொள்.  மரணம் என்பதை நன்றாகப்புரிந்து கொண்டு மரணம் என்பது இந்த உடல் உயிரைத்தாங்கும் வல்லமையை இழந்துவிட்டது.  இந்த உடல் சீரழிந்துவிட்டது சக்தியில்லாமல் போய்விட்டது என்பதை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டு.  உனது ஆத்மாவை, வெட்டவெளியை, உயிரை (மூன்றும் ஒன்றே பெயர்தான் வேறு).  நீயே வலுக்கட்டாயமாக வெளியே போகவிடு உனது உடலைப்பார் நன்றி சொல் இத்தனைக்காலம் இந்த உயிரைத்தாங்கிய உனது உடலுக்கு நன்றியைத் தெரிவி பின் இப் பிரபஞ்சத்தின் வெட்டவெளியோடு கலந்துவிடு.  இது உன் மன விழிப்புநிலையிலிருந்தால் தான் சாத்தியம்.  மரணத்தை மரணமாக ஏற்றுக்கொண்டுவிடு.  உன் மரணத்தை நீயே கொண்டாடு.  ஞாபகம் வைத்துக்கொள் "மனோ கல்பித ஜெகத்" மனமே சகலமும் நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய். எனவே நீ உன்னை வெட்டவெளி என்று மட்டுமே நினைத்து எப்போதும் தியானத்தில் இரு.  குருநாதர் எந்த வகையிலும் இந்த விசயத்திற்கு உதவிக்கு வரமாட்டார்.  குருநாதர் பாதையைத்தான் காண்பிப்பார் நீதான் முடிவெடுத்துச்செல்லவேண்டும்.  எனது வழிகாட்டுதல் எப்போதும் அன்போடு உனக்கு உண்டு (பற்றோடு இல்லை).  உனக்கு உள்மனதில் ஏதேனும் ஆசை அல்லது பற்று குறைபாடுகள் இருந்தால் உனது மறுபிறவிக்கு நீயே வித்திட்டாயென்று அர்த்தம். எனவே ஆசையோ பற்றோ இல்லாமல் உன் மரணத்தினை ஏற்றுக்கொள்.  அடுத்த வெட்டவெளிப்பயணத்தின் போது சந்திக்கலாம்.

Tuesday, 15 November 2011

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தர் எங்கு சென்றாலும் தான் வெட்டவெளியில் பயணித்துக்கொண்டதாக சொல்வார்.  அதாவது அவரது ஆன்மா அவரின் உடலை பின்பற்றி பின்னாலேயே செல்லும்.  அவரது உடல் முன் செல்லும்.  இந்த சவம் என்னும் பூத உடல் முன் சென்று ஆன்மா பின் செல்லும் பாவனை தான் அவரது ரகசியம்.  நான் என்று சொல்லுவதற்கு பதிலாக தாதக்கட என்றே சொல்வாராம்.  யார் அந்த தாதக்கட  புத்தனின் பூத உடலே அந்த தாதக்கட நான் என்று சொல்லும் போது ஆணவமலம் சேரும் என்றே தன்னை தான் தாதக்கட என்று ஒவ்வொரு உபன்யாசத்தின் போதும் விளக்குவார்.  தாதக்கட அங்கு சென்றது அப்போது தாதக்கடவிற்கு இது தெரிந்தது. வெட்டவெளியே தானும் பிற உயிர்களும் என்பது உணர்ந்தபின் எல்லா உயிரிடத்தும் இவ்வெட்டவெளி உள்ளதால்.  எல்லா உயிரிடத்தும் உண்மையாய், உயிராய், ஆன்மாவாய் இருப்பதை அன்போடு பார்க்க ஆரம்பித்து  தானும் அன்புமயமாக மாறி பற்றற்று தொடர்ந்து வெட்டவெளியிலே பயணம் செய்தார் புத்தர்.  அவரோடு நாமும் பயணிப்போம்.