today

Friday, 18 November 2011

வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்

வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்

வெட்டவெளி என்பதைத்தான் உயிர், ஆன்மா, ஜீவாத்மா என்றெல்லாம் புரிந்துகொள்கின்றோம்.  உனது உயிரை உன்னால் பாதுகாக்க இயலுமா என்றால் அது முடியாத காரியம்.  எதையெல்லாம் உன்னால் பாதுகாக்க இயலாதோ அதை எல்லாம் அழிக்கவும் இயலாது. அப்படியானால் உனது உயிரை அழிக்கவும் முடியாது என்பது புரிகின்றதல்லவா.  இந்த சடலம் விரைவில் அழிந்துவிடக்கூடியது என்பது புரிந்துவிட்டது ஆனால் இந்த சடலத்தோடு கூடிய உயிர் என்ன ஆனது என்பதை யாரும் உணரவில்லை.  உயிர் பிரிந்து விட்டதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது.  உயிரை அழிக்க இயலாத போது அது வெட்டவெளியில் கலந்துவிடுகின்றது,  வெட்டவெளி என்பதே இந்த பிரபஞ்சம்.  இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமி என்னும் கோளில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.  ஏன் இந்தக்கோள் பூமியானது கூட இப்பிரபஞ்சத்திலே பயணத்தில் தான் உள்ளது.  மெய் என்பதன் பொருள் எப்போதும் இருக்கும் உண்மை.  அப்படியானால் வெட்டவெளி என்பது எப்போதும் இருக்கும் உண்மை என்பதை இதன் மூலம் உணரவேண்டும்.

இந்த சடலத்தில் உயிர் இருக்கும் வரை இந்த சடலத்திற்கு வியாதிகள் ஏதும் வரா வண்ணம் இதனை நாம் பராமரித்தல் அவசியம்.  அதிக பட்சம் நேரத்திற்கு சாப்பிட்டு வயிறை பட்டினி போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.  எப்போதும் பசி என்னும் வியாதி நம்மை அண்டாமல் பார்த்துக்க்கொள்ளல் அவசியம்.  பசி என்பது இருப்பின் நமது மனம் பசியைக்குறித்தே கவனமாய் இருக்கும்.  பசியடங்கியபின் தியானத்தில் அமர்வது அவசியம்.  அளவுக்கு அதிகமாயும், அளவுக்குறைவாயும் உண்ணுதல் கூடாது.  அளவாய் பசி பொறுக்கும் அளவு உண்ணவேண்டும்.  நன்றாக சாப்பிட்டுவிட்டு தியாணத்தில் அமர்ந்ததும் தூக்கம் வரும் இதனைத்தான் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சிலேடையில் கூறியுள்ளனர். இதுவும் உண்மையே மயக்கம் வரும் ஆனால் அந்த கனத்தில் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம்.  விழிப்புடன் இருப்பது என்றால் சாப்பிட்டவுடன் தூக்கம் வரும் ஆனால் நாம் தியானத்தில் இருக்கின்றோம் என்ற புரிதல்.  தியானம் என்றால் ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு இருப்பது அல்ல நமது பேச்சினை நாமே கேட்பது அதாவது நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பயித்தியக்காரத்தனமான சப்தங்களை , இரைச்சல்களை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும்.  நாம் நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பேச்சைக்கேட்க்க ஆரம்பித்து விட்டோம் எனில் மாயாண்டியை நாம் கவனிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது மாயாண்டிக்குத்தெரிந்துவிட்டால் மாயாண்டி தனது இயல்பு நிலையான மிகுந்த அமைதிக்குத்திரும்பிவிடுவார். அது வரை அவர் இடும் கூச்சல்களும் , சப்தங்களும், இரைச்சல்களும் ஏராளம். நமது மனம் என்னும் மாயாண்டியை பேசாமலிருக்கச்செய்வதே இந்த தியானத்தின் வேலை.  மனம் அமைதியாகிவிட்டால் மற்றவை எல்லாம் கிட்டிவிடும்.  மாயாண்டியின் கட்டுப்பாட்டில் தான் நாம் அனைவருமே இயங்குகின்றோம்.  மாயாண்டியின் விளக்கம் -  மாயா + ஆண்டி (மாயா - மாயை என்னும் அலைக்கழிக்கும் சக்தி, ஆண்டி - சிவம் என்னும் தியான ரூபம் - அமைதியின் வடிவம்)  இருவேறுபட்ட நிலைகளின் சங்கம ரூபமே மாயாண்டி என்னும் மனம்.  சிலநேரங்களில் அமைதி பல நேரங்களில் குழப்பம் இதுவே மனம் என்னும் மாயாண்டியின் தத்துவம்.  நமது மாயாண்டியை சரணடைவோம் மாயா விழகி ஆண்டியிடம் வீழ்ந்து பற்றற்ற நிலை கேட்டு தவம் இருப்போம்.  தவம் என்பது கிடைக்கும் வரை காத்திருத்தல்.
அடுத்த பயணத்தின் போது சந்திக்கலாம்.

Wednesday, 16 November 2011

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

(பற்றற்றே சொல்கிறேன்) உன் மரணத்தருவாயில் இன்னும் சில மணித்துளிகள் கடந்து நீ இறந்து விடுவாய் என்பது தெரிந்தால் மிகுந்த சந்தோசத்தோடு இரு. இதோ உனக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்பதில் நம்பிக்கையோடிரு. மிகுந்த சிரமப்பட்டு இறக்காதே. அய்யோ நான் இறக்கின்றேனே. இந்த உலகத்து இன்பங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டுச்செல்கிறேனே என்று எண்ணாதே. எனது குடும்பம், குழந்தை, மனையாள், சொத்து, வாகனம், நண்பன், குரு நாதர், மேலும் பலவற்றைவிட்டுச்செல்கிறேன் என்று எண்ணவேண்டாம்.  எனக்கு முக்தி கிடைக்கும் அல்லது கிடைத்து விடும் என்ற பற்றோடு இராதே.  மரணம் என்பதின் இயல்பை நன்றாய் புரிந்துகொள்.  மரணம் என்பதை நன்றாகப்புரிந்து கொண்டு மரணம் என்பது இந்த உடல் உயிரைத்தாங்கும் வல்லமையை இழந்துவிட்டது.  இந்த உடல் சீரழிந்துவிட்டது சக்தியில்லாமல் போய்விட்டது என்பதை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டு.  உனது ஆத்மாவை, வெட்டவெளியை, உயிரை (மூன்றும் ஒன்றே பெயர்தான் வேறு).  நீயே வலுக்கட்டாயமாக வெளியே போகவிடு உனது உடலைப்பார் நன்றி சொல் இத்தனைக்காலம் இந்த உயிரைத்தாங்கிய உனது உடலுக்கு நன்றியைத் தெரிவி பின் இப் பிரபஞ்சத்தின் வெட்டவெளியோடு கலந்துவிடு.  இது உன் மன விழிப்புநிலையிலிருந்தால் தான் சாத்தியம்.  மரணத்தை மரணமாக ஏற்றுக்கொண்டுவிடு.  உன் மரணத்தை நீயே கொண்டாடு.  ஞாபகம் வைத்துக்கொள் "மனோ கல்பித ஜெகத்" மனமே சகலமும் நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய். எனவே நீ உன்னை வெட்டவெளி என்று மட்டுமே நினைத்து எப்போதும் தியானத்தில் இரு.  குருநாதர் எந்த வகையிலும் இந்த விசயத்திற்கு உதவிக்கு வரமாட்டார்.  குருநாதர் பாதையைத்தான் காண்பிப்பார் நீதான் முடிவெடுத்துச்செல்லவேண்டும்.  எனது வழிகாட்டுதல் எப்போதும் அன்போடு உனக்கு உண்டு (பற்றோடு இல்லை).  உனக்கு உள்மனதில் ஏதேனும் ஆசை அல்லது பற்று குறைபாடுகள் இருந்தால் உனது மறுபிறவிக்கு நீயே வித்திட்டாயென்று அர்த்தம். எனவே ஆசையோ பற்றோ இல்லாமல் உன் மரணத்தினை ஏற்றுக்கொள்.  அடுத்த வெட்டவெளிப்பயணத்தின் போது சந்திக்கலாம்.

Tuesday, 15 November 2011

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தாவின் வெட்டவெளி நடைப்பயணம்.

புத்தர் எங்கு சென்றாலும் தான் வெட்டவெளியில் பயணித்துக்கொண்டதாக சொல்வார்.  அதாவது அவரது ஆன்மா அவரின் உடலை பின்பற்றி பின்னாலேயே செல்லும்.  அவரது உடல் முன் செல்லும்.  இந்த சவம் என்னும் பூத உடல் முன் சென்று ஆன்மா பின் செல்லும் பாவனை தான் அவரது ரகசியம்.  நான் என்று சொல்லுவதற்கு பதிலாக தாதக்கட என்றே சொல்வாராம்.  யார் அந்த தாதக்கட  புத்தனின் பூத உடலே அந்த தாதக்கட நான் என்று சொல்லும் போது ஆணவமலம் சேரும் என்றே தன்னை தான் தாதக்கட என்று ஒவ்வொரு உபன்யாசத்தின் போதும் விளக்குவார்.  தாதக்கட அங்கு சென்றது அப்போது தாதக்கடவிற்கு இது தெரிந்தது. வெட்டவெளியே தானும் பிற உயிர்களும் என்பது உணர்ந்தபின் எல்லா உயிரிடத்தும் இவ்வெட்டவெளி உள்ளதால்.  எல்லா உயிரிடத்தும் உண்மையாய், உயிராய், ஆன்மாவாய் இருப்பதை அன்போடு பார்க்க ஆரம்பித்து  தானும் அன்புமயமாக மாறி பற்றற்று தொடர்ந்து வெட்டவெளியிலே பயணம் செய்தார் புத்தர்.  அவரோடு நாமும் பயணிப்போம்.

பற்றற்றான் திருக்கோவில் தரிசனம்

பற்றற்றான் திருக்கோவில் தரிசனம்
வெட்டவெளி பயணி தரிசனம் செய்த பற்றற்றான் திருக்கோவில் - தரித்ரேஸ்வரர் ஆலயம். பிரபஞ்ச இருளில் இந்த பூமி என்னும் கிரகத்திற்கு அப்பால் சுமார் ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் இந்த கோவில் உள்ளது. முதலில் இருளினை தியானம் செய்ய வேண்டும். தனியனாய், ஏகாந்தனாய், சுடுகாட்டின் அமைதியாய் எந்த வித மன சப்தங்களும் இல்லாமல் சவதியானத்தில் இந்த பூத உடலைவிட்டு ஆன்மா மெதுவாக வெளிக்கிளம்பி அடுத்த நொடியில் இந்த பூமி என்னும் கிரகத்தை விட்டு வெளியேறி சுற்றிலும் பார்வையை செலுத்த மிகப்பிரமாண்டமான இருள்வெளி எங்கும் அமைதி இதுவே பிரபஞ்ச இருள் இந்த இருளுக்குள் ஒரெயொரு ஒற்றைப்புள்ளியாய் வெண்மையாய் சிறு ஒளி தெரியும் அதனை பார்த்ததும் அடுத்த சில கனங்களில் அதன் அருகாமையை உணரமுடியும். இதோ தெரிகிறது தரித்ரேஸ்வரர் ஆலயம்.  எங்கும் மயான அமைதி யாரும் தரிசனம் செய்ய வராத இடம்.  மிகுந்த மனவலிமையும் தவ வலிமையும் பற்றற்றோருமே சென்று வர இயலும்.  மெதுவாக செல்ல ஆரம்பித்தேன் இருபுறமும் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகள், விலை மதிப்பில்லா வாகனங்கள், கார்கள், ஏரோபிளேன்கள், ஹெலிகாப்ட்டர்கள், இறந்து போன ஏதேதோ விலங்குகள், தாவரங்கள், அழுகிப்போன உடல்கள், பாலாய்போன கட்டிட இடிபாடுகளின் கல் மண் போன்ற பொருட்கள்,  ஏகப்பட்ட விலைமதிப்பில்லா வைரங்கள், தங்க நகைகள்,  எல்லா நாட்டு கரன்சிகள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற சான்றிதழ்கள்,  நான் போற்றிப்பாதுகாத்த என் உயிர் போன்ற பொருட்கள் யாவும் குப்பையாய் கிடந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சென்றேன்.  எனது அப்பா, அம்மா, உறவினர் எனது குழந்தைகள், மனைவி என் சுற்றத்தார் அனைவரும் அழுகிய பினங்களாய் சிதறிக்கிடந்தார்கள் நான் பதறவில்லை மெது வாக சிறு புன்னகையோடு எதிலும் என் மனத்தை ஒட்டாமல் என் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் குப்பையாய் கிடந்தது, திடிரென ஒரு சப்தம் மிக மெல்லியதாய் அப்போது தான் அது விழுந்திருக்கக்கூடும் ஒரு அழகிய பெண்ணின் நிர்வான உடல் அழுகி நாற்றமெடுத்த நிலையில் நான் சென்ற பாதயில் குறுக்கே கிடந்த்தது சவதியானம் நான் பழகியிருந்ததால் அந்த சவத்தை சவம் சடலம் என்று உணர்ந்து அதனையும் கடந்தேன். படிக்கட்டுகள் மூன்று இருந்தது பார்த்ததும் கடந்தேன். மிகச்சிவப்பாய் ஒரு சதுர வெளிச்சம் (சந்தியாகால சூரியனைப்போன்ற ஒரு ஒளி மேடை சுமார் ஒருகிலோமீட்டர் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது) எங்கெங்கும் ஒளிவெள்ளம்.  எனது ஆன்மா பயணித்தது.  நடுவில் மிகப்பிரகாசமாய் தரித்ரேஸ்வரர் லிங்க வடிவில் மிகப்பிரகாசமாய்  ஆயிரம் சூரியன் சேர்ந்தாலும் அவ்வளவு வெண்மையான ஒளி எங்கும் காண முடியாது அப்படிப்பட்ட லிங்க ரூபமாய் தரித்ரேஸ்வரர் அங்கே இருந்தார். நான் அங்கு பலமுறை வலம் வந்தேன்.  எனது தரித்திரம் பற்று இன்றோடு ஒளிந்தது என என் உள்மன ஆற்றல் எனக்கு உணர்த்தியது.  உண்மையில் அங்கு யாருமே கிடையாது.  தனியனாய் ஏகாந்தனாய் தரித்ரேஸ்வரர்.  என்னையே நான் பார்த்துக் கொண்டது போல் இருந்தது அந்த தரித்ரேஸ்வரரின் ஒளிவெள்ளத்தின் ஊடாகக்கூட எனது ஆத்மா பயணிக்க முடிந்தது அப்படியானால் நான் எனது ஆத்மா வேறு பரமாத்மா வேறு என்றல்லவா நினைத்திருந்தேன் அது பொய் என உணர்ந்தேன் அங்கு பரமாத்மாவோடு எனது ஆத்மாவும் ஒன்றறக்கலந்தது முழு வெளிச்சத்தையும் என்னால் உணரமுடிந்தது சிறிது நேரம் தரித்ரேஸ்வரரின் ஒளிவெள்ளத்தில் தங்கினேன். பின் மெது வாய் பிரிந்தேன் எனது கர்மாவைச் செய்ய இப்பூமியெனும் கிரகத்தினுள் நுழைந்தேன். எல்லாம் அடுத்தடுத்த செகண்டுகளில் நடந்தது.  எல்லாம் கனவா அல்லது நினைவா தெரிய வில்லை.  கோவில் ஊழியர் தம்பி மணி இரவு 8.40  ஆகிவிட்டது மன்னிக்கனும் உங்களின் தியானத்தைக்கழைத்துவிட்டேன் எழுந்திருத்து வீட்டுக்குச்செல்லுங்கள் என்றார். எனக்குள் ஒரு பூரண அமைதிகிட்டியதென நான் உணர்ந்தேன்.  சிவன் கோவிலில் நான் அமர்ந்து தியானம் செய்தது சந்திரகாந்தக்கல் அந்தக்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டது. சிறு குளிர்ச்சியுடன் இருந்தது.  பின் அவ்வப்போது இந்த தரித்ரேஸ்வரர் ஆலயத்திற்குள் தியானத்தின் மூலம் சென்று வர ஆரம்பித்தேன்.  முடிந்தால் நீங்களும் சென்று வரலாம் தியானத்தின் மூலமாக மட்டுமே.  எல்லாம் தியானமே.  வெட்டவெளிப்பயணியின் பயணம் தொடரும்.  அடுத்த தியானத்தில் சந்திப்போம்.  ஓம் தரித்ரேஸ்வராய நமஹா.

Monday, 14 November 2011

பற்றற்றிருக்க ஒரு வெட்டவெளித்தியானம்

பிண அறையில் வெட்டவெளியானின் தியானம்.
எனது நண்பன் ஒருவன் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது இறந்து விட்டதாக தகவல் வந்தது.  அவனது பிரேதம் பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை தியானத்தின் வாயிலாக தூரதிருஷ்டியில் பார்த்த போது. அவன் உடல் சவமாய் கிடக்கின்றது.  தூக்கி ஒரு பொருளைப்போல போடுகின்றனர்.  காதுக்கு அடியில் கத்தியை விட்டு லேசாய் அமுக்கி பின்னோக்கி ஒரு கோடு அடுத்த காது வரை இழுத்து தொப்பியை கழட்டுவதைப்போல தோலை உரித்து முகத்தை முதலில் மூடி விட்டார்கள். பின் தொண்டைக்கு அருகில் கத்தியை வைத்து லேசாய்க்கீரி தொப்புள் கீழ் வரை ஒரே கோடு நன்றாகப்பிளந்த பின் நெஞ்சுக்கூட்டுக்குள் கத்தியைச்செறுகி கூட்டுக்கடியில் இருந்ததை சுத்தமாக அறுத்து எடுத்து சித்தாள் சட்டியைப்போன்றதொரு சட்டியில் போட்டார்கள்.  இதோ அவன் சித்தாள் சட்டியில் சில ரத்தமும் கருப்புமாய் சதையுமாய் கிடக்கின்றான்.  இது அவனின் சவம்தான்.  இருப்பினும் அவன் என் நண்பன் என்ற உணர்வோடு பார்த்த போது ஏதோ ஒன்று சோகத்தையும் துக்கத்தையும் தந்தது.  பற்றோடு பார்ப்பதனால் ஏற்ப்பட்டது என்பது இப்போது புரிகிறது. அவனது நாக்கு எடுக்கப்படும் போது அந்த தொழிளாலி மிகுந்த சிரம்ப்பட்டுவிட்டார் அது ஒரு கடல் மீன் போல் இருந்தது மிக நீளமாய் உருண்டையாய் அதை நான் பார்த்தேன்.  அவனது மரணம் அவனது எல்லாவற்றையும் எடுத்துச்சென்று விட்டது.  அவன் நேசித்த அவனது சுற்றத்தார் உறவினர் நண்பர்கள் யாரும் அவன் சடலத்தைப்பார்க்க அஞ்சி அது ஒரு பிணம் என்ற பயத்தோடு அந்த சவத்தை அவனை பார்த்தனர்.  அவன் எப்போதும் நேசித்த ஜோதிட, ஆன்மீக புத்தகங்கள் அவனுக்காய் காத்திருந்தன இனி அவன் வரமாட்டான் என்பது அவைகளுக்குத்தெரியாது.  அவனது குடும்பத்தாரோடு இருந்ததைக்காட்டிலும் புத்தகங்களில் அவன் ஏதோ தேடியிருக்கிறான். நேரம் வெகுவாய் கழிந்துள்ளது ஏனெனில் அவன் அலமாரியில் ஏகப்பட்ட புத்தகங்கள்.  சில இன்னும் திறக்கப்படாமல் புத்தக பில்லோடு இருந்தது.  எனது குருநாதர் சொல்லும் போது படிக்காதே பழகு என்றுதான் சொல்லுவார். அவன் படித்ததோடு சரி எதனையும் பழகவில்லை.  அவன் உடல் அறுக்கப்பட்டது அறுக்கப்பட்டதாய் தான் கிடந்தது.  உள்ளே எட்டிப்பார்த்தால் வெட்டவெளிதான் இருந்தது. வெற்றிடம் மட்டுமே மிச்சம்.  இந்த உடலை வளர்ப்பதற்கு அவன் எதையெல்லாம் சாப்பிட்டிருப்பான்.  விலங்கினக்கழிவுகள், தாவரயினக்கழிவுகள் இன்னும் ஏதேதோ சாப்பிட்டு அவன் உடலை பாதுகாத்திருந்தான். விலங்கினக்கழிவுகள் - இரண்டு நாட்களுக்கு முன் அறுக்கப்பட்ட ஆடு, கோழி போன்றவற்றின் சடலங்கள் நாற்றம் வெளியே தெரியாத வண்ணம் நன்றாய் மசால் அறைத்து தேங்காயில் பாலெடுத்து வேகவைத்து தின்ற சடலம் இது. இறந்து போன கத்தறிக்காய், வாழைக்காய், தேங்காய், முருங்கைக்காய் , கீரைகள் போன்ற தாவர இன உயிரற்ற கழிவுகளையும் உண்டு வளர்க்கப்பட்ட தேகம் அது அந்த சவம்.  எனது தவ வலிமையால் அவன் ஆத்துமாவைத்தேடினேன் அவன் ஆக்சிடெண்ட் ஆன இடம் தேடிச்சென்றேன் எங்கேயும் அவன் இல்லை.  எங்கே சென்றது அவன் ஆன்மா எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  இதோ கண்டுபிடித்துவிட்டேன். ஒரு செடிக்கு அடியில் வேரின் நுனியில் அவன் ஆத்மா. அருகில் சென்று விசாரித்தேன் நீ என் நண்பன் தானே என்றேன் அவன் எதுவும் பேசவில்லை என்னைக்காணவே மிகுந்த பயம் கொண்டிருந்தான்.  நீ எப்படி என்னோடு பேசமுடிகிறது.  எனக்கு நான் யார் என்பதே தெரியாது. நீ என்னை ஏமாற்றுகிறாய் எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. நீ இங்கிருந்து சென்று விடு. வீனாய் உன் பண்டிதத்தை என்னிடம் ஏற்றிவிடாதே. சென்றுவிடு இங்கிருந்து என வேண்டினான். நானும் கட்டாயப்படுத்தாமல் வந்துவிட்டேன்.  இறந்தபின் அந்த ஆத்மா உயிர் இந்த பிரபஞ்சத்தோடு கலந்து விடுகின்றது என்பதனை உணர்ந்தேன்.  அவனுக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை.  அவன் பற்றற்று இருந்தான். உயிரோடு இருந்தபோது எல்லாமே என்னுடையது என் மனைவி, எனது குழந்தைகள், எனது சொத்து, எனது கார், எனது தோட்டம், எனது புத்தகங்கள்  எல்லாவற்றிலும் பற்றோடு இருந்தான்.  எனது மதம், எனது தெய்வம், எனக்கு பிடித்த கோயில், எனது குரு என்றெல்லாம் பறைசாற்றியவன்.  இப்போது சொல்கிறான் எதுவும் ஞாபகம் இல்லை எனக்கு ஞாபகசக்தியைக்கொடுத்து என்னை பண்டிதனாக்கிவிடாதே நான் எதையும் தெரிந்து கொள்ள விருப்பமில்லை என்முன் நின்று என்னை பிரெயின் வாஸ் செய்து விடாதே என்றான். ஆத்மாவுக்கு பிரெயின் இல்லை. என்பதை எனக்கு உணர்த்தினான். அடுத்த வெட்டவெளிப்பயணத்தின் போது சந்திக்கலாம்.  பற்றற்று இருக்ககவே இத்தியாணம்.  படிக்காதீர்கள் பழகுங்கள். தியானம் செய்ய.

Friday, 11 November 2011

இறப்பு , அர்த்தம் , கற்றல்- சவ தியாணம்

மரணத்தை வெல்லும் தியானம்
இது சற்று பலசாலியான தைரியமான மனம் உள்ளவர்கள் மட்டும் செய்யும் தியானம். நான் இந்த தியானத்தில் இருந்திருக்கிறேன். அவ்வப்போது செய்தும் வருகிறேன். வெட்டவெளியில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென நான் இறந்து விட்டேன். எனது உடலைவிட்டு இந்த உயிர் (ஆன்மா) பிரிந்து விட்டது.  ஆனால் நான் விழிப்புநிலையில் தான் இருந்தேன்.  இந்த ஆன்மா என்றும் அழியாதது.  எனது உடல் ஆழ்ந்த உறக்க நிலையில் சவமாய்க்கிடந்தது. எனது ஆன்மா வீட்டினுள் எனது உடலறுகே சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  இந்த சூட்சும சரீரம் ஆன்மா மட்டும் உடையது வெண்மையான ஒளி ரூபமாய் இருந்ததையும் பார்த்தேன், இங்கு சவம், ஒளி உடல் ஆன்மா, விழிப்புநிலை எண்ண அலை ஆகிய அனைத்தும் ஒருங்கே எனது உடலறுகே என்ன நடக்கப்போகிறதோ என காத்திருந்தது.  ஆன்மீகத்தின் மிக உயர்ந்த உன்னத நிலை வைராக்கிய நிலை காத்திருத்தல் தான்.  காத்திருத்தல் என்பது தவம். தவம் என்பது காத்திருத்தல் தான்.  காத்திருத்தலின் எதிரி மனப்பாங்கு அலுப்பு தட்டுதல்.  அலுப்பு இருந்தால் ஆன்மீக பயணம் தடைபடும். எனவே அலுப்பு இல்லாமல் காத்திருத்தல் அவசியம்.  காலை 7.30 எனது மூத்த மகன் வந்து எழுப்பினான் அப்பா எழுந்திருங்க இன்னைக்கு லீவா லேட்டாகிவிடப்போகுது எழுந்திருங்கப்பா ? எனச்சொன்னான் இது எனது சூட்சும சரீரத்திற்கு கேட்டது ஆனால் சவத்திற்கு கேட்க வில்லை.  இரண்டாவது மகன் வந்தான் என் மீது ஏறி மிதித்து விளையாண்டு என்னை இந்த சவத்தை எழுப்ப முயற்ச்சித்தான். இந்த சவம் சவமாகவே கிடந்தது.  இறுதியில் எனது மனைவி வந்து இந்த சவத்தை பார்த்ததுமே கண்டு பிடித்து விட்டாள். உயிர் இல்லை உடல் சில்லென்றாகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியாமல் எனது மாமனாரை அழைத்து வந்து பரிசோதித்து முடிவு செய்தார்கள் நான் இறந்து விட்டதை.  எனது குடும்பத்தாறும் உறவினர்களும் தெருவினரும் ஊர்க்காரர்களும் எனது அம்மா அப்பா ஏன் இந்த பிரபஞ்சமும் சோகமயமாக காட்ச்சி தந்தது.  சூட்சும சரீரம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது.  என் மீது இத்தனை பேரும் இவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  சவத்தை எடுக்க யாருக்கும் மனமில்லை குடும்ப டாக்டரும் வந்து பரி சோதித்து விட்டு உறுதி செய்தார்.  முடிந்து விட்டது.  வீடு இளவு வீடாகிப்போனது. பாடைகட்டி சங்கு ஊதி மணிஅடித்து பஞ்சாயத்து போர்டுக்கும் சொல்லியாகி விட்டது.  சவத்தை தூக்கி குழிப்பாட்டி பாடையிலே எடுத்து அலங்கார வண்டியிலே எடுத்துச்செல்கிறார்கள். சவ ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது.  எனது மகன் அழுத வண்ணம் கையிலே தீச்சட்டியோடு தெருவழியாகச்சென்று ரோட்டினையடைந்து சுடுகாட்டுக்குச்சென்று கொண்டிருக்கிறான் எனக்கு இன்னும் உணர்வு வரவில்லை வெட்டவெளிப்பயணத்திலிருந்து மீள யாரிடமும் நான் சொன்னதுமில்லை நான் சமீபகாலமாக வெட்டவெளிப்பயணத்திலிருக்கிறேன் என்று. எனது சூட்சும சரீரமும் இறுதி ஊர்வலத்தில் எனது சின்ன மகன் அருகே சென்று கொண்டிருந்தது.  சின்னவன் எப்போதும் போல சந்தோசமாய் விளையாண்டு கொண்டும் சிரித்துக்கொண்டும் என்ன என்று தெரியாமல் அப்பாவை எங்கு கூட்டிட்டுப்போறீங்க என்று உறவுக்காரரை கேட்டுக்கொண்டிருந்தான் அவர் யார் என்றே எனக்குத்தெரியாது அவர் கண்கள் முழுவதும் நீர் ஊற்று பெருகி தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுது கொண்டே சொன்னார் உன் அப்பா திரும்பிவரமுடியாத இடத்துக்குச்சென்று விட்டாரப்பா.  பகவானின் கணக்கில் கோளாறோ.  இது போன்ற மகன்களைவிட்டுவிட்டு சென்றுகொண்டிருக்கிறான் உன் தகப்பன்.  சின்னவன் சொன்னான் என் அப்பா எங்குசென்றாலும் என்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவார் என்னைத்தனியாக விட்டிட்டு போகமாட்டார்.  உங்கள் செல் போனைத்தாருங்கள் நான் என் அப்பாவிடம் பேசுகிறேன் என்று கேட்டு வாங்கி எனது எண்ணிற்க்குத் தொடர்பு கொண்டான். எனது செல்போன் கூப்பிட்டது என்னை உடனே எனது சூட்சும சரீரம் செல்போனை நோக்கிப்பறந்தது அங்கே என் மனைவி அழுது புலம்பிய வண்ணம் எனது செல்போனை எடுத்து சிகப்பு பட்டனை அழுத்தினாள் துக்கம் தொண்டையை அடைத்த வண்ணம் யார் கூப்பிட்டார்கள் என்று பார்க்கவில்லை.  எனக்கு இப்போதுதான் புரிந்தது நான் இரண்டு நாட்களுக்கு மேல் உடலை விட்டுப்பிரிந்து வெட்டவெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பது எல்லாம் கனவா அல்லது நினைவா எனத்தெரியவில்லை. அடுத்த செகண்டு எனது உடலைத்தேடி சுடுகாட்டுக்குப்பயணமானேன்.  அப்போது தான் சவத்தை இறக்கி வைத்தார்கள்.  உடம்பினுள்ளே புகுந்து விட்டேன். சிறிது அசைவு என் உடலிலே தெரிந்தவுடன் எல்லோரும் பயந்து ஏய் சவம் அசையுதுடா ஓடு ஓடு என்று ஓடியே விட்டார்கள் எனது சின்னமகன் வந்தான் ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டான். பெரிய மகன் என்னை பார்த்து ஓ வென்று அழுதான்.  மாமனார் சற்று ஓரமாய் மிகவும் இறுகிய முகத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.  எனது அப்பா கேட்டார் என்னப்பா ஒன்றும் ஆகவில்லையே என்று.
நான் எழுந்தேன் பூமாலையோடு நெற்றி முழுவதும் பூசப்பட்ட சந்தனம் விபூதி குங்குமம் ஒற்றை ரூபாய் நாணயம். இத்தோடு எழுந்தபோது ஒருவன் செல்போனிலே படம் பிடித்தான்.  இந்த சவம் சவமாக இன்னும் நாட்கள் இருக்கின்றது என்பதைத்தெரிந்து கொண்டேன்.  வெட்டவெளிப்பயணிகள் நிச்சயம் வீட்டில் யாரிடமாவது சொல்லிவிட்டு பயணத்தை செய்யுங்கள்.  இல்லையேல் மரணித்து விடுவீர்கள்.  உங்களின் பூத உடல் எரிக்கப்பட்டுவிடும்.  மீண்டும் அடுத்த வெட்டவெளிப்பயணத்தில் சந்திப்போம்.  முக்கிய குறிப்பு இது உண்மைச்சம்பவம் அல்ல தியானம் மட்டுமே.

திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்


திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்
அன்று எனது உறவினரின் திருமணத்திற்க்குச் சென்றிருந்தேன். நான் சென்று சேரும் போது இரவு 11.00 மணியாகிவிட்டது, ஒரு பேனுக்கடியில் படுத்துத் தூங்கினேன். நள்ளிரவு நேரம் மணி 1.30 இருக்கும் திடீரென விழிப்பு ஏற்ப்பட்டது.  எழுந்து அமர்ந்து கொண்டேன். சினிமா தியேட்டரைப்போன்ற பிரமாண்டமான திருமண மண்டபம்.  யாரும் இல்லை அங்கங்கு உறவினர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். சுமார் ஒரு இருபது பேர்கள் தான் இருந்தார்கள்.  மண்டபமே வெறிச்சென்று இருந்தது.  வெட்டவெளி தியாணம் உள்ளே பிரவேசிக்க ஆரம்பமாகியது.
யாருமற்று ஏகாந்தமாய் தனியனாய் இருக்கும் போது ஒரு அமானுஷ்ய அமைதி அதாவது சுடுகாட்டின் அமைதி திடீரென்று என்னைச் சூழ்ந்தது ஆஹா வந்து விட்டதய்யா வெட்டவெளி என்று எனக்குள் ஒரு உணர்வு.  வரிசையாகப்போடப்பட்ட சேர்கள், மணவறை மேடை முழு அலங்காரத்தில் இருந்தது. காலை 6.30 க்கு மேல் முஹூர்த்தம்.  சுமார் 800 பேர்கள் அம்ர்ந்து பார்க்கும் வசதி.  யாருமற்று இப்போது இருந்தது.  கார் பார்க்கிங் ஏரியா சுமார் 100 கார்கள் நிற்கும் அளவுக்கு இருந்த இடத்தில் இப்போது 3 கார்கள் தான் இருந்தது.  எங்கும் வெட்டவெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த அசைவும் இல்லை.  இதுவே நமது வெட்டவெளி அந்த காட்ச்சியை அப்படியே உள்வாங்கிக்கொண்டேன்.  விடிய ஆரம்பித்தது.  கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது.  முஹூர்த்தமும் சிறப்பாய் முடிந்தது.  இப்போது மண்டபமே கடும் கூட்டமும் கூச்சலுமாய் இருந்தது.  எப்படி இருந்த இடம் இப்படி ஆகி விட்டது. மதியம் 3.00 மணி மீண்டும் வெட்டவெளி உள்ளே புகுந்தது.  மண்டபத்தில் அலங்கோலமாய் சேர்கள், பணியாளர்கள் சேர்களையெல்லம் அடுக்க ஆரம்பித்தார்கள்.  சுவர் ஓரமாய் அடுக்கிவிட்டார்கள், கூட்டும் பெண்கள் மண்டபத்தை பெருக்க ஆரம்பித்தார்கள்.  குப்பைகள் எல்லாம் வெளியேற்றப்பட்டன.  இப்போது மண்டபமே வெறிச்சோடியிருந்தது.  எங்கும் வெட்டவெளி பரவியிருந்தது.  கார்பார்க்கிங் ஏரியாவில் எதுவும் இல்லை.  எங்கும் வெட்டவெளி.  காணவே மிகப் பயங்கரமாய் இருந்தது.  எங்கும் எந்த சப்த்தமும் இல்லை இதையும் உணர்ந்தேன்.  விழிப்பு நிலையில் இருக்கும் போது கூட வெட்டவெளி மிகப்பயங்கரமாய் இருந்தது.  சிறிது நேரம் இதனை ரசித்து அச்சத்துடன் தியாணத்தில் இருந்தேன்.  மாலை வேளையில் இந்த மண்டபம் லைட்டுகள் ஏதும் இன்றி எப்படி இருக்கும் என்பதையும் பார்த்து விட்டுச்செல்ல மனம் சொன்னது.  இருந்தேன்.  ஒரேஒரு லைட்டுமட்டும் போடப்பட்டு மிகவும் படுபயங்கர வெட்டவெளியாய் காட்சி தந்தது.  மரணம் எப்படி இருக்கும் என்பதை உணரவேண்டுமானால் அது இது வாகத்தான் இருக்கும் ஏனென்றால் நான் மரணித்த பின் எனது சவம் எடுத்துச்செல்லப்படும் போது எனது ஆன்மா ஏகாந்தமாய் தன்னந்தனியனாய் பயணிக்கும் இந்த வெட்டவெளியில் எனக்கு ஏதேனும் பற்று இருக்குமானால் 87 ஆயிரம் யோனிபேதங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த ஆன்மா புகும், புகுந்து மீண்டும் பிறக்கும், பிறந்தால் இறக்கும் , இறந்தால் பிறக்கும்.
யோனியிலிருந்து யோனிக்குப்பயணம் செல்லும் ஆன்மா.  மிகக்குறைந்த நேரமே வெட்டவெளியில் பயணிக்கிறது.
மீண்டும் அடுத்த வெட்டவெளிப்பயணத்தில் பார்க்கலாம்.

திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்

திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்
அன்று எனது உறவினரின் திருமணத்திற்க்குச் சென்றிருந்தேன். நான் சென்று சேரும் போது இரவு 11.00

மணியாகிவிட்டது, ஒரு பேனுக்கடியில் படுத்துத் தூங்கினேன். நள்ளிரவு நேரம் மணி 1.30 இருக்கும் திடீரென

விழிப்பு ஏற்ப்பட்டது.  எழுந்து அமர்ந்து கொண்டேன். சினிமா தியேட்டரைப்போன்ற பிரமாண்டமான திருமண

மண்டபம்.  யாரும் இல்லை அங்கங்கு உறவினர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். சுமார் ஒரு இருபது பேர்கள் தான்

இருந்தார்கள்.  மண்டபமே வெறிச்சென்று இருந்தது.  வெட்டவெளி தியாணம் உள்ளே பிரவேசிக்க ஆரம்பமாகியது.
யாருமற்று ஏகாந்தமாய் தனியனாய் இருக்கும் போது ஒரு அமானுஷ்ய அமைதி அதாவது சுடுகாட்டின் அமைதி

திடீரென்று என்னைச் சூழ்ந்தது ஆஹா வந்து விட்டதய்யா வெட்டவெளி என்று எனக்குள் ஒரு உணர்வு. 

வரிசையாகப்போடப்பட்ட சேர்கள், மணவறை மேடை முழு அலங்காரத்தில் இருந்தது. காலை 6.30 க்கு மேல்

முஹூர்த்தம்.  சுமார் 800 பேர்கள் அம்ர்ந்து பார்க்கும் வசதி.  யாருமற்று இப்போது இருந்தது.  கார் பார்க்கிங்

ஏரியா சுமார் 100 கார்கள் நிற்கும் அளவுக்கு இருந்த இடத்தில் இப்போது 3 கார்கள் தான் இருந்தது.  எங்கும்

வெட்டவெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த அசைவும் இல்லை.  இதுவே நமது வெட்டவெளி அந்த

காட்ச்சியை அப்படியே உள்வாங்கிக்கொண்டேன்.  விடிய ஆரம்பித்தது.  கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் கூட்டம்

வர ஆரம்பித்தது.  முஹூர்த்தமும் சிறப்பாய் முடிந்தது.  இப்போது மண்டபமே கடும் கூட்டமும் கூச்சலுமாய்

இருந்தது.  எப்படி இருந்த இடம் இப்படி ஆகி விட்டது. மதியம் 3.00 மணி மீண்டும் வெட்டவெளி உள்ளே புகுந்தது.

 மண்டபத்தில் அலங்கோலமாய் சேர்கள், பணியாளர்கள் சேர்களையெல்லம் அடுக்க ஆரம்பித்தார்கள்.  சுவர்

ஓரமாய் அடுக்கிவிட்டார்கள், கூட்டும் பெண்கள் மண்டபத்தை பெருக்க ஆரம்பித்தார்கள்.  குப்பைகள் எல்லாம்

வெளியேற்றப்பட்டன.  இப்போது மண்டபமே வெறிச்சோடியிருந்தது.  எங்கும் வெட்டவெளி பரவியிருந்தது. 

கார்பார்க்கிங் ஏரியாவில் எதுவும் இல்லை.  எங்கும் வெட்டவெளி.  காணவே மிகப் பயங்கரமாய் இருந்தது. 

எங்கும் எந்த சப்த்தமும் இல்லை இதையும் உணர்ந்தேன்.  விழிப்பு நிலையில் இருக்கும் போது கூட வெட்டவெளி

மிகப்பயங்கரமாய் இருந்தது.  சிறிது நேரம் இதனை ரசித்து அச்சத்துடன் தியாணத்தில் இருந்தேன்.  மாலை

வேளையில் இந்த மண்டபம் லைட்டுகள் ஏதும் இன்றி எப்படி இருக்கும் என்பதையும் பார்த்து விட்டுச்செல்ல மனம்

சொன்னது.  இருந்தேன்.  ஒரேஒரு லைட்டுமட்டும் போடப்பட்டு மிகவும் படுபயங்கர வெட்டவெளியாய் காட்சி

தந்தது.  மரணம் எப்படி இருக்கும் என்பதை உணரவேண்டுமானால் அது இது வாகத்தான் இருக்கும் ஏனென்றால்
நான் மரணித்த பின் எனது சவம் எடுத்துச்செல்லப்படும் போது எனது ஆன்மா ஏகாந்தமாய் தன்னந்தனியனாய்

பயணிக்கும் இந்த வெட்டவெளியில் எனக்கு ஏதேனும் பற்று இருக்குமானால் 87 ஆயிரம் யோனிபேதங்களில்

ஏதேனும் ஒன்றில் இந்த ஆன்மா புகும், புகுந்து மீண்டும் பிறக்கும், பிறந்தால் இறக்கும் , இறந்தால் பிறக்கும்.
யோனியிலிருந்து யோனிக்குப்பயணம் செல்லும் ஆன்மா.  மிகக்குறைந்த நேரமே வெட்டவெளியில் பயணிக்கிறது.
மீண்டும் அடுத்த வெட்டவெளிப்பயணத்தில் பார்க்கலாம்.

Thursday, 10 November 2011

விளையாட்டுச்சித்தன்

எனது மகனின் பள்ளிக்குச்சென்றிருந்தேன் -
வெறுமையான பார்வையோடு பிளே கிரவுண்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.  அதாவது சும்மா பார்ப்பது.  எந்த வித ஈடுபாடும் இல்லாமல் பார்ப்பது.  எந்த வித எண்ணங்களின்றி பார்ப்பது.  மாணவர்கள் மாணவிகள் எல்லோரும் விளையாண்டு கொண்டிருந்தனர்.  விளையாட்டுச்சித்தனின் பாடலில் வாழ்க்கையே விளையாட்டுத்தான் எல்லாம் விளையாட்டே என்று அவர் பாடலில் அடிக்கடி வரும்.  ம். எல்லாம் விளையாட்டே.
இதோ இங்கு வெட்டவெளியாய் பிளே கிரவுண்டு.  எப்போதும் வெட்டவெளியாய்த்தான் இருக்கும் யாராவது விளையாடினால் அங்கு சில பிம்பங்களாய் கலர்கலராய் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது சில விளையாடும் மாணவ மாணவியரின் பிம்பங்கள்.  ஏதோ உள்ளுக்குள் உணர்த்தியது. எங்கும் வெட்டவெளி தெரிகிறது.  எதிலும் எதுவும் இல்லை.  மயங்கிப்போனேன் தூங்கிவிட்டேன்.  சிறிது நேரத்தில் எனது மகன் வந்து எழுப்பிவிட்டான்.  அப்பா , தூங்கிட்டீங்களா, எழுந்திருங்க, வீட்டுக்குப்போகலாம்.  கர்மா என்னை அழைத்தது.  வீட்டிற்குச்சென்றவுடன் அவன் அம்மாவிடம் போட்டுக்கொடுத்திட்டான். அப்பா தூங்கிட்டாரும்மா நாந்தான் எழுப்பினேன்.  அவரொரு தூங்கு மூஞ்சி எப்போதும் தூங்கிவிடுவார்.  அவர்களுக்குத் தெரியாது இன்று வரை நான் வெட்டவெளிப்பயணத்திலிருக்கிறேன் என்று. விரைவில் அவர்களும் என் பின் வருவார்கள்.  யாரும் கட்டாயமாக வெட்டவெளிப்பயணத்திற்குள் நுழைய இயலாது.  முன் பிறவி தவம் இருக்க வேண்டும். சிறிது புரிதலும் இருக்க வேண்டும்.
வெட்டவெளிப்பயணியின் பயணம் தொடரும்.

எளிய முறையில் வெட்ட வெளித் தியாணம்

பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். சன்னலோர இருக்கை. பேருந்து சொகுசுப்பேருந்து.  மிக மெது வாக ஊர்ந்து செல்லும் வகையைச் சார்ந்தது.  வெறுமையான வெளிப்பார்வை.  நான் முன்னோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றேன்.  ரோடு பின்நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றது.  ரோடு வெறுமையாகத்தான் இருந்தது.  அவ்வப்போது ஏதேனும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. வருவதும் போவதுமாய் ஏதேதோ பிம்பங்கள் வருவதும் போவதும் தெரிந்தது.  ரோடு என்பது வெட்டவெளி அதில் வருவதும் போவதுமாய் இருப்பது மாயை.  ரோடு மட்டும் கருப்பாய் மிக வழுவழுப்பாய் மின்னிக்கொண்டு வெறுமையாய் இருந்தது.  நான் பார்த்ததைக்காட்டிலும் ரோடு என்னைப்பார்த்தது.  ஏதோ ஒன்று உள்ளுக்குள் உணர்த்தியது.  வெறுமையை நோக்கிய பயணத்தில் நான்.  இதோ இந்த புழுக்கூட்டுக்குள் சிக்குண்ட ஆன்மா வெட்டவெளியில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டே வெட்டவெளிப்பயணத்தில் நான். தூங்கிவிட்டேன்.  கண்டக்டர் திட்டினார்.  ஏம்யா மப்பா மயங்கிக்கிடக்கிற.  தொந்தரவு பண்றதுக்குண்ணே வந்துட்டாம்யா.  வெட்டவெளி என்னைக் கோபித்துக்கொண்டது.  வெறுமையாய் சிரித்துக் கொண்டே இறங்கினேன். மன்னிச்சுடுங்கோ சார் சுகர் அதிகமாயிட்டுது அதான் மயக்கம். நன்றிங்கையா (என்னை வெட்டவெளியிலிருந்து மீட்டதற்க்கு). என்று படியைவிட்டு இறங்கினேன்.

Tuesday, 8 November 2011

வெற்று வெளின்னா என்ன ?

வெற்று வெளி என்றால் வெற்று வெளிதான்.  இப்போது நான் இருக்கின்றேன்.  அகம்பாவமுடைய நான். இந்த நான் என்று அற்றுப் போகின்றேனோ அன்று தான் இந்த ஆன்மீக வாதி ஆன்மீக வாதியாக முடியும்  இங்கயும் ஒரு ஐ டி இருக்கு என்னது ஆன்மீக வாதி.


 இன்னைக்கு இது போதும்.