today

Saturday 17 December 2011

எப்போதும் தியானத்திலிருத்தல் என்றால்

எப்போதும் தியானத்திலிருத்தல் என்றால்

எனது குருநாதரின் வாக்கில் அடிக்கடி அவர் சொல்வது எப்போதும் தியானத்திலிரு. இதை என்னால் நீண்ட காலங்களாகவே புரிந்துகொள்ள இயலவில்லை. குருநாதரிடமே கேட்டுவிட்டேன்.  அப்போது அவர் தந்த விளக்கம் இதோ.

நான் தவறாக புரிந்து கொண்டது.

அதிகாலையில் எழவேண்டும் பின் காலைக்கடன்களை முடித்து விட்டு குளித்துவிட்டு. ஆன்மீகவாதி போல வேஷமிட்டுக்கொண்டு (காவி வேட்டி, துண்டு, ருத்ராட்சம், நெற்றிநிறைய விபூதி மனம் நிறைய நிறைவேராத ஆசைகள் ) உள்ளே கோபம் வெளியே மிகுந்த அமைதி) கண்களை மூடி உட்கார்ந்து கொண்டே தூங்க வேண்டும் அவ்வப்போது சவம் போல் படுத்துக்கொள்ளவேண்டும். பசி எடுத்தால் நேரத்திற்கு சாப்பிட்டுக்கொண்டு வந்து விட வேண்டும். யாரிடமும் பேசவே கூடாது மெளனவிரதம் போல் இருந்து கொள்ளவேண்டும் மொத்தத்தில் சோம்பேறியைப்போல் இருக்கவேண்டும் அவ்வளவு தான் இது எத்தனை நாளைக்குத்தான் இருப்பதோ இதுவும் அலுப்பு தட்டிவிடும் இறுதியில் அங்கங்கு இரத்தம் கட்டிவிடும் மிக உயர்ந்த சுட்ட சோம்பேறி போல் ஓர் வாழ்க்கை என்றுதான் நான் நினைத்தேன். இந்த சோம்பேறிகளால் இவனுக்கும் பிரயோசனமில்லை வெளி உலகிற்கும் பிரயோசனமில்லை.  கடவுளிடம் ஆசையோடு எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று மன ஆசைகளைநிறைவேற்ற பிரார்த்தனை வேறு செய்ய வேண்டும்.  ஆசைகள் நிறைவேறா விட்டால் கடவுளைத்திட்ட வேண்டும் ஆள் பார்த்து கடவுளும் நடந்துகொள்கிறார் என்று நினைத்துக்கொள்ளவேண்டும்.  முடிந்தால் ஒரு வாரத்திற்கு ஒரு கடவுளை மாற்றிகொள்ள வேண்டும்.  முடிவினில் சாமியுமில்லை சாத்தானுமில்லை ஆசையே மிஞ்சி வெட்டவெளிக்குக் குறைபாட்டோடு கொண்டுசென்றுவிடும் என்பதையும் தெரிந்து கொள்ளவேண்டும்.

குருநாதரின் விளக்கம்.

மனம், சொல், செயல், புத்தி மூன்றும் சேர்ந்து கொண்டு எதைச்செய்தாலும் அது தியானம் அவ்வளவுதான்.
மேலும் தினசரி வாழ்வில் எப்படி தியானத்தைக்கடைபிடிப்பது என்றால் முதலில் காலை எழுந்துவிட்டோம் என்ற உணர்வு வரவேண்டும். பின்னர் மூச்சினைக்கவனிக்க வேண்டும் வலப்பக்கமா அல்லது இடப்பக்கமா என்று கவனித்தால் சற்று இளைப்பு வரும் மூச்சு சரியாக வராது சற்று நேரம் யோசிக்க வேண்டும் நெஞ்சு படபடக்கும். பின்னர்தான் தெரியும் எந்தப்பக்கமாக நாசித்துவாரத்தில் காற்று உள்வந்து வெளி செல்கிறது.  இதுதான் முதல் தியானம் யாவருக்கும்.

அடுத்து காலைக்கடன்களை முடித்தல் இதிலும் முழு ஈடுபாட்டோடு மிகக்கவனமாக மிக மெது வாக எது வெளியேறுகிறது என்பதனைக்கவனிக்கவேண்டும் எல்லாவற்றையும் மிக மெது வாக செய்தால் போதும் எந்த அவசரமும் வேண்டாம்.  நேரம் மிக மெதுவாகவே கழிய வேண்டும் இது மிகவும் முக்கியம்.  மூச்சு சீராக இருக்கவேண்டும்.  அடுத்துக்குளிப்பது மிக மெதுவாக குளிக்கவேண்டும் நீங்கள் வீட்டிலோ அல்லது ஆற்றிலோ குளிக்கலாம் ஆனால் நீரின் ஸ்பரிசம் முழுவதையும் உணர்ந்து குளிக்கவேண்டும்.  நீங்கள் விடும் நீர் எந்தக்காரணத்தைக்கொண்டும் வீனாக வெளியே சிந்திவிடக்கூடாது. இங்கும் மூச்சுக்கவனிக்கப்படவேண்டும், மிகவேகமாக மூச்சினை வெளியேற்றவோ உட்புகுத்தவோ கூடாது. எதிலும் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும்.

அடுத்து அவரவர் இஷ்ட தெயவத்தை வணங்குதல் இங்கும் மூச்சு கவனிக்கப்பட வேண்டும் எந்த அவசரமும் வேண்டாம் மிக நிதானமாக எல்லாவற்றையும் செய்ய வேண்டும். பூசையறையில் இருக்கும் பொருட்களை மிக மெதுவாகவும் கவனமாகவும் கையாள வேண்டும்.

அடுத்துக்காலைச்சாப்பாடு மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

அடுத்து அமைதியாக அமரவேண்டும் எண்ணங்களின் அலைகளைக்கவணிக்க வேண்டும் இங்கும் மூச்சு சீராக இருக்க வேண்டும். அடுத்து அவரவர் பணிகளைச்செம்மையாக ச்செய்யவேண்டும் உத்தியோகம் புருசலட்சணம் எனவே அவரவர் தத்தமக்கு விதிக்கப்பட்ட கடைமைகளை செவ்வனே செய்ய வேண்டும் மிக மெதுவாக கவனமாக மூச்சினை கண்ட்ரோல் செய்து கொண்டே செயலும் புத்தியும் ஒருங்கே இருந்து பணியாற்ற வேண்டும். நாம் செய்யும் செயல் எதுவோ அதில் மிகுந்த கவனமும் அக்கறையும் ஈடுபாடும் அன்பும் கொண்டிருக்க வேண்டும். எந்த வித எரிச்சலோ கோபமோ இதர தேவையற்ற எண்ணங்களோ எழாமல் பார்த்துக்கொள்ளல் வேண்டும்.  எந்தப்பணியினைச்செய்தாலும் அவசரம் வேண்டவே வேண்டாம் மிக மெது வாகச்செய்தால் போதும் மூச்சு சீராக இயங்குகிறதா என்பதை அவ்வப்போது கவனித்துக்கொள்ளல் வேண்டும். மூச்சினைக்கண்ட்ரோல் செய்ய அவ்வப்போது வெளிக்காற்றை நன்றாக அதிகமாக உள்ளிளுத்து தொப்புள் வரை செல்ல அனுமதிக்க வேண்டும் வயிறு பலூன் ஊதியதைப்போல பெரிசாக ஆகி மிக மெது வாக காற்று இறங்குதல் போல மிக மெதுவாக காற்றினை வெளியேற்ற வேண்டும் உதாரணமாக பெருமூச்சு இடுவதைப்போல. இப்பொது சற்றே மூச்சு சீராக அமையும் இந்த முறையினை அவ்வப்போது செய்து வரவேண்டும்.  உடல் உஷ்ணம் அதிகமாகாமலிருக்க தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும்.  தண்ணீர் அதிகமாகக்குடிக்ககுடிக்க சிறுநீர் அதிகமாக வெளியேறும் அதனையும் மிக மெதுவாக வெளியேற்றினால் போதும்.

அடுத்து மதிய சாப்பாடு மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

அடுத்து ஒரு முப்பது நிமிட ஓய்வு காலையில் நடந்த சம்பவங்களின் நமது பங்களிப்பு என்ன ? என்ன என்ன தவறுகள் நாம் செய்துள்ளோம்? என்பதை மனதால் அசைபோட வேண்டும் கண்கள் மூடியிருக்க வேண்டும், மிகுந்த மெளனத்தோடு இருக்க வேண்டும். மூச்சு நன்றாக கவனிக்கப்பட வேண்டும். ஒரு அமானுஷ்ய அமைதிகிடைக்கும் பின் மதிய பணிகளை கவனிக்க வேண்டும்.  மிக முக்கிய மாக எந்த பணியினையும் நாளையென்று  தள்ளிப்போடக்கூடாது எல்லா பணிகளையும் அன்றே முடித்து விட வேண்டும். நாளைஎன்பது புதிதாய்த்தான் பிறக்க வேண்டும்.

அடுத்து மாலை டிபன் காபி டீ மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

மாலை வேலை முடிந்து வீடு திரும்பியதும் ஒரு குளியல் அல்லது சுத்தமாக இருக்க கைகால் முகம் கழுவி முடிந்த வரை சிறு ஒப்பனை கண்ணாடிமுன் நின்று நம்மை நாமே ரசிப்பது இது தன்னம்பிக்கையை வளர்க்கும்.  இங்கும் மூச்சு கவனிக்கப்பட வேண்டும்.

அடுத்து குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் குழந்தைகளோடும் அண்டை அயலாரோடும் சந்தோஷமாக அமைதியாக நல்லவற்றைக்குறித்து பேசி மகிழவேண்டும். இங்கும் மூச்சு கவனிக்கப்படவேண்டும்.  நீங்கள் எதைச்செய்தால் உங்களின் மனம் அமைதியாகுமோ சந்தோசப்படுமோ அதைச்செய்ய வேண்டும். டீவி பார்க்கலாம் சினிமாவுக்குச்செல்லலாம் அல்லது வேறு ஏதாவது செய்யலாம் உங்களின் இஷ்டத்திற்கு. மொத்தத்தில் நீங்கள் சந்தோஷமாய் அமைதியாய் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் ஆனால் மூச்சு கவனிக்கப்படவேண்டும். ஒரே சீராய் காற்று உட்புகுந்து வெளியேற வேண்டும் உங்களின் நாசி மூக்கு வழியே.

அடுத்து இரவு உணவு அதிக பட்சம் எண்ணெயில் முங்கிய உணவுவகைகளை இரவிலே தவிர்த்துவிட வேண்டும்.
மூச்சைநன்றாக கவனிக்கவேண்டும் படபடப்பு இருக்கவே கூடாது.  எந்தக்காரணம் கொண்டும் கோபம் வராமால் பார்த்துக்கொள்ளவேண்டும், பசிக்குச்சாப்பிட வேண்டும் ருசிக்குச்சாப்பிடக்கூடாது.  எவ்வளவு சாப்பிட்டால் உங்களுக்கு போதுமோ அவ்வளவு சாப்பிட்டால் போதும் எல்லாவற்றிலும் கவனம் தேவை எது சாப்பிடுகிறது எதை சாப்பிடுகிறது இந்த சவம் உடலைப்பேன சாப்பிடுகிறது நீங்கள் இல்லை என்பது ஞாபகத்தில் இருக்கவேண்டும்.

நீங்கள் எதைக்கவனிக்கிறீர்களோ அது அங்கு இல்லாமல் போய்விடும்.

ஒரு நாளை ஒருவருடமாக வாழ இதுவே வழிமுறை. இந்த தியானத்தினால் உங்களுக்குக்கிடைக்கும் முதல் பட்டபெயர் ஏய் எருமை மாடு ? ஏய் சோம்பேறி ? ஏய் தடியா ? போன்ற ஏக வசனச்சொற்கள் தான். அப்படியானால் இந்த தியானம் உங்களுக்குரியது உங்களுக்கு தியானம் சித்தியாகிவிட்டது என்று அர்த்தம்.  இதற்கு மற்றுமொரு பெயர் உண்டு எருமை மாட்டுத்தியானம். என்னை பலர் இவ்வாறு தான் திட்டுகிறார்கள் எனக்கு மிகுந்த பெருமையைத்தருகிறது இந்தச்சொற்கள். எல்லா ஒளிகளும் ஒலிகளும் சிவனே.  யாவும் அவனே அவன் சிவனே.  இவனும் சிவனே. அன்போடு இருங்கள் இன்று மட்டும்.  மகிழ்வாய் இருங்கள் இன்று மட்டும்.  நாளை என்பது எவனுக்கும் ஏன் சிவனுக்கும் இல்லை.

என்னைக்கண்டால் பலருக்கும் பொறாமை எரிச்சல் ஏன் என்றால் ? நான் அமைதியாக இருக்கிறேன்,  எதிலும் கலந்து கொள்வதில்லை, இருப்பது போதும் என்று இருக்கிறேன்.  எனக்குத் தேவைகளோ ஆசைகளோ கிடையாது.  எந்தத் தேவையும் ஆசையும் இல்லாதிருப்பதால் எனக்கு அலைச்சல்கள் இல்லை வியாதிகள் இன்றுவரை என்னை அண்டியது இல்லை.  எனக்கு நிறைய நேரம் இருக்கிறது எனது குடும்ப்த்தோடும் குழந்தைகளோடும் சுற்றத்தாரோடும் மிகுந்த அன்பாயும் அமைதியாயும் எந்தப்ப்கையும் இன்றி நன்றாய் வாழ்ந்து வருகிறேன்.  எனது தினசரி வருமானமே எனக்குப்போதும்.  எனக்கு எவ்வித ஆசைகளும் இன்று வரை இல்லை.  எனது சொத்து எனது தாய் தந்தையர் எனக்குக்கொடுத்த இந்த உடல் என்னும் சடலம் மட்டுமே. எனவே நான் எதையும் பாதுகாக்க வேண்டிய அவசியமுமில்லை.  எனது மூன்று மகன்களையும் எந்தக்குறையுமின்றி இறைவன் படைத்துள்ளான் அவர்களின் வாழ்வை அவர்களின் கை கால் கண் கொண்டு அவர்கள் பிழைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  அவர்கள் பிறப்பிலேயே ஞானியாய்த்தான் பிறந்துள்ளார்கள் அவர்களுக்கும் எந்த வித ஆசைகளோ எதிர்பார்ப்புகளோ கிடையாது என்பதையும் நான் நன்கு அறிவேன். நான் அடிக்கடி அவர்களிடம் ஆசைப்படாதிரு எதிர்பார்க்காதே என்று தான் சொல்லிவருகிறேன்.  அவர்களும் இப்போது பழகி வருகிறார்கள் வேறு வழியின்றி.  அவர்களது தகப்பனின் முயற்சியின்மை குறித்து நன்றாகவே அவர்களுக்குத்தெரியும்.

இன்றைய பயணத்தில் இவ்வளவு போதும்.


No comments:

Post a Comment