விஸ்வ ரூபம்
நானும் எனது குடும்பத்தாரும் துணிக்கடைக்குச்சென்று இருந்தோம் எனது மகன் வாங்கிய துணியை போட்டுப்பார்க்க கடையிலிருக்கும் துணி மாற்றும் அறைக்குச்சென்றான். நான்கு புறமும் கண்ணாடியாலான(முகம் பார்க்கும்) அறை அது, இது வரை அதைப்போன்ற அறையை அவன் பார்த்ததில்லை. மிகுந்த பிரமிப்போடு என்னிடம் கேட்டான் அப்பா என்ன இது ? இங்கு இத்தனை உருவங்கள் தெரிகிறதே அத்தனையும் நானாகவே தெரிகிறேன் ! நீங்களும் இத்தனை பேராக தெரிகிறீர்களே ! என்ன ஒரு அதிசயம் இதை எல்லாரிடமும் சொல்லவேண், என்றான். இரண்டாம் வகுப்பு படிக்கின்றான்- விஷ்ணு, இது தான் விஸ்வரூபம் என்றேன் நான். விஸ்வரூபம் என்றால் என்ன அப்பா என்றான் ஆன்மீகத்தின் மிக உயர்ந்த ஞானமுடைய பார்வை அது. அது இதுதான். இதனை சரியாக புரிந்து கொண்டால் எல்லாம் கிட்டிவிடும். எப்போதும் போல புரியாதது மாதிரியே பேசுகிறீர்களே ? அப்பா என்றான். அப்பாவுக்கு அப்படிப்பேசியே பழக்கமாகிவிட்டது ! உனக்குத்தெரியவருகின்றபோது தெரிந்துவிடும். அது வரை நீ காத்திருக்கவேண்டும். நான் இங்கு இருந்து சிரித்தால் ஆயிரமாயிரம் பேரும் சிரிக்கின்றார்கள் அத்தனையிலும் என்னைப்போன்றே இர௮௮ின்றார்கள் கண்ணாடியில் தெரிந்த வரிசையான பிம்பங்களைப்பார்த்து அதிசயித்து போனான் எனது மகன். இதில் மிகுந்த இரகசியம் உண்டு இதற்கு முந்தைய பிறவியிலும் இனி வருகின்ற பிறவியிலும் இத்தனை நபர்கள் நம்மைப்போன்றே எந்தத்திசையிலும் ஆயிரம் ஆயிரமாய் அனைத்தும் பிம்பங்களாய், மரணத்தை நோக்கிய பயணத்தில் நாம் எல்லோரும் இருக்கின்றோம். எப்போது மரணமோ ? "மரணம் எல்லாவற்றையும் எடுத்துச்சென்று விடும்"" அப்போது எல்லாம் முடிந்துவிடும். அனைத்தும் இல்லாமல் போய்விடும். அப்போது உண்மையான விஸ்வரூபமான வெட்டவெளிக்குள் நாம் பிரவேசிப்போம்.
சகலமம் யாம் யாவையும் யாம் என்றார் - பகவான் ஸ்ரீ கிருஸ்ணர்.
நீங்கள் எங்கிருந்து எதைப்பார்த்தாலும் அது கிருஸ்ணனைத்தான் பார்க்கிறீர்கள் அப்படியானால் நீங்கள் எங்கிருக்கிறீர்கள் கிருஸ்ணாவுக்குள் தானே. அப்படியானால் நீங்களும் கிருஸ்ணாதானே. கிருஸ்ணா கிருஸ்ணாவிலேயே அடக்கம். அதைத்தான் இந்த மாய பிம்பங்களின் வழி நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
எனது மகன் யார் ? கிருஸ்ணா, நான் யார் நானும் கிருஸ்ணா, யாரிடம் துணி வாங்கினேன், கிருஸ்ணாவிடம் வாங்கினேன். யாரிடம் பணம் கொடுத்தேன் கிருஸ்ணாவிடம் கொடுத்தேன். கடைக்காரர் யார் அவரும் கிிுணாதான், அங்கு பாத்ரூம் கழுவியது யார் அவரும் கிருஸ்ணாதான். வெளியிலே செக்யூரிட்டியாக நிற்பது யார் அவரும் கிருஸ்ணாதான். எங்கு பார்த்தாலும் கிருஸ்ணா எதிலும் கிருஸ்ணா, யாரும் கிருஸ்ணா யாவையும் கிருஸ்ணா. எச்சரிக்கை, "கிருஸ்ணனிடம் நீங்கள் அன்பு வைத்தால் யாவற்றிலும் அன்பு வைக்கவேண்டியது வரும்" வேற்றுமை என்பது இல்லாமல் போய் வெற்றிடம் வந்து விடும். பின்னர் என்ன வெட்டவெளி இரகசியம் உங்களுக்கு கிட்டிவிடும்.
இதில் சரியான புரிதல் வேண்டும்.
பகவத்கீதைக்கு உறை எழுதி தன் பெயரை முன் அட்டையில் மொழிபெயர்ப்பு என்று பல ஆயிரம் ப௮ேர் ததங்களின் புகழுக்கு வித்திட்டாலும் 25 வது வயதில் ஆரம்பித்து 64 வது வயதில் மொழிபெயர்ப்பை முடித்து தன் வாழ் நாளையும் முடித்துள்ளார்கள் - அவர்களின் ஆத்மாவும் இதனைப் புரிந்து கொள்ளல் வேண்டும்.
கிருஸ்ண லீலையின் புரிதல் - ஒரு பெண் அல்லது ஒரு ஆண் உங்களை மயக்கும் அளவுக்கு உட்படுத்தினால் அங்கு கிருஸ்ணா தன் லீலையை காண்பிக்கின்றார் என்று அர்த்தம், புரியவில்லையா இங்கே மயக்குபவனோ அல்லது மயக்குபவளோ மற்றும் மயங்கு பவனோ அல்லது மயங்கு பவளோ - இருவரும் கிருஸ்ணாதான். அதாவது தன்னையே பார்த்து இன்புறுவது. ஆண் பெண் என்னும் உருவ வேற்றுமையுள்ள பிம்பங்கள் தன்னையே பார்த்து இன்புறுகின்றன.
கிருஸ்ணாவுக்கு ஏகப்பட்ட கோபிகைகளோடு உறவு ஆயிரமாயிரம் மனைவிகள் அவன் ஒழுக்கமற்றவன் என்று பிற மதத்தினர் சரியான புரிதல் இன்மையினால் குறை சொல்வதுண்டு இப்போது சொல்கிறேன் உனது மனைவியும் கிருஸ்ணாவின் மனைவிதான் உனது தாயும் கிருஸ்ணாவின் மனைவிதான் அப்படி என்றால் என்ன அர்த்தம் - நீயும் உனது தந்தையும் கிருஸ்ணாவின் மறு உருவங்கள் தான். புரியவில்லையா கோபம் வருகின்றதா - நீதானையா கிருஸ்ணா, கிருஸ்ணா கிருஸ்ணாவிற்குள் அடக்கம் அவ்வளவு தான்.
நான் பேருந்தில் ஏறுகின்றேன் யார் ஓட்டுகின்றார் கிருஸ்ணாதான் ஓட்டுகின்றார் யார் டிக்கட் கொடுப்பது கிருஸ்ணாதான் டிக்கட் கொடுக்கிறார். ஆண் பெண் பயணிகள் யாவரும் கிருஸ்ணாதான். பயணம் கிருஸ்ணாவிற்குள், பயணித்தது கிருஸ்ணா. இந்த பூமி கிருஸ்ணா இந்த கிரகங்கள் அதுவும் கிருஸ்ணா. இவை அத்தனையையும் ஒட்டுமொத்தமாக உனது மனக்கண் முன்னே நீ பார்ப்பது தான் விஸ்வரூப தரிசனம். நீ எங்கிருந்து தியானம் செய்கிறாயோ அந்த இடமும் அங்கு நீ அமர்ந்து தியானம் செய்வதும் உனக்குத்தெரிய வேண்டும் அதாவது உன்னையே நீ மனத்திரையில் காண வேண்டும் இது தான் விஸ்வரூபம். - தியான தரிசனம்.
சரியான புரிதல் இருந்தால் யாவரும் விஸ்வரூப தரிசனத்தை சில நொடிப்பொழுதில் காணலாம்.
எனது குருநாதர் எப்போது ஆசீர் வதித்தாலும் "அன்போடு இரு" என்றே ஆசிர்வதிப்பார். அவர் என்னிடம் அடிக்கடி சொல்வார் 'என்னை ஞானவான், ஞானி, எல்லாம் அறிந்து உணர்ந்தவன் என்று சொல்வதைக்காட்டிலும் ' "அன்போடு இருந்தவன்" என்றே சொல்வதில் தான் மிகப்பெரு மகிழ்வு உண்டு. உன்மையான ஞானம் சகலத்தையும் ஏற்றுக்கொண்டும் சகித்துக்கொண்டும் அன்போடிருத்தல் தான். இறுதியான உண்மையும் இறுதியான ஞானமும் இதுதான். 'அன்பே சிவம்' நான் அன்போடிருக்க சிவம் எல்லாவற்றையும் எனக்க்தரவேண்டும அன்போடிருக்க பழகவேண்டும். வெறுப்புணர்ச்சியும் ஒரு வன்முறைதான் எனவே வெறுப்புணர்ச்சி கொள்ளாமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளல் வேண்டும். வெறுப்புணர்ச்சி தலைதூக்கும் போது உனது மனத்தில் நீ 'நான் எப்போதும் அன்போடிருப்பவன்' என்ற நினைவு ஒன்று இருந்தால் போதும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிடும். அன்பு மயமான அந்த சிவன் உன்னுள் புகுந்து நீயும் சிவனாவாய். எவன் ஒருவனுக்கு கோபமும் வெறுப்புணர்ச்சியும் வருகின்றதோ அப்போதே அவன் 'ஆன்மீக வாதி ' என்று தன்னைச்சொல்லிக்கொள்ள இலாயக்கற்றவன். எப்போதும் அன்போடிருப்பம் மட்டுமே ே ்மீக வாதியாக தகுதிஉள்ளவன். எப்போதும் அன்போடிருக்கப்பழகு அது ஒன்றே இப்போதைய தவம். தினமும் காலையில் எழுந்த உடன் இன்று ஒரு நாள் மட்டும் நான் 'அன்போடு இருப்பேன்' என்று உனது மனதிற்கு உத்தரவு கொடு. விரைவில் அன்பு மயமான அனைத்து தெய்வங்களின் அருளும் உனக்கு கிடைப்பதோடு மட்டுமின்றி 'நான் கடவுள்' என்ற பரம இரகசியத்தினை "தன் உணர்வினால்", நீ உணர்வாய் "அன்போடிருந்தால் மட்டுமே".
. "கடவுள் தன்மை அன்பிலே மட்டும் தான் உண்டு". எனவே சரியான புரிதலோடு ' அன்போடு இருக்க பழகவும்'.
உன்னை மூன்று முறை ஆசீர்வதிக்கின்றேன்
அன்போடு இரு
அன்போடு இரு
அன்போடு இரு
இன்றைய பயணத்தில் இவ்வளவு போதும்.

No comments:
Post a Comment