வெட்டவெளியை மெய் - என்று உணர்தல்
வெட்டவெளி என்பதைத்தான் உயிர், ஆன்மா, ஜீவாத்மா என்றெல்லாம் புரிந்துகொள்கின்றோம். உனது உயிரை உன்னால் பாதுகாக்க இயலுமா என்றால் அது முடியாத காரியம். எதையெல்லாம் உன்னால் பாதுகாக்க இயலாதோ அதை எல்லாம் அழிக்கவும் இயலாது. அப்படியானால் உனது உயிரை அழிக்கவும் முடியாது என்பது புரிகின்றதல்லவா. இந்த சடலம் விரைவில் அழிந்துவிடக்கூடியது என்பது புரிந்துவிட்டது ஆனால் இந்த சடலத்தோடு கூடிய உயிர் என்ன ஆனது என்பதை யாரும் உணரவில்லை. உயிர் பிரிந்து விட்டதை மட்டுமே நம்மால் உணரமுடிகிறது. உயிரை அழிக்க இயலாத போது அது வெட்டவெளியில் கலந்துவிடுகின்றது, வெட்டவெளி என்பதே இந்த பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் இந்த பூமி என்னும் கோளில் நாம் பயணித்துக்கொண்டிருக்கின்றோம். ஏன் இந்தக்கோள் பூமியானது கூட இப்பிரபஞ்சத்திலே பயணத்தில் தான் உள்ளது. மெய் என்பதன் பொருள் எப்போதும் இருக்கும் உண்மை. அப்படியானால் வெட்டவெளி என்பது எப்போதும் இருக்கும் உண்மை என்பதை இதன் மூலம் உணரவேண்டும்.
இந்த சடலத்தில் உயிர் இருக்கும் வரை இந்த சடலத்திற்கு வியாதிகள் ஏதும் வரா வண்ணம் இதனை நாம் பராமரித்தல் அவசியம். அதிக பட்சம் நேரத்திற்கு சாப்பிட்டு வயிறை பட்டினி போடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். எப்போதும் பசி என்னும் வியாதி நம்மை அண்டாமல் பார்த்துக்க்கொள்ளல் அவசியம். பசி என்பது இருப்பின் நமது மனம் பசியைக்குறித்தே கவனமாய் இருக்கும். பசியடங்கியபின் தியானத்தில் அமர்வது அவசியம். அளவுக்கு அதிகமாயும், அளவுக்குறைவாயும் உண்ணுதல் கூடாது. அளவாய் பசி பொறுக்கும் அளவு உண்ணவேண்டும். நன்றாக சாப்பிட்டுவிட்டு தியாணத்தில் அமர்ந்ததும் தூக்கம் வரும் இதனைத்தான் உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சிலேடையில் கூறியுள்ளனர். இதுவும் உண்மையே மயக்கம் வரும் ஆனால் அந்த கனத்தில் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். விழிப்புடன் இருப்பது என்றால் சாப்பிட்டவுடன் தூக்கம் வரும் ஆனால் நாம் தியானத்தில் இருக்கின்றோம் என்ற புரிதல். தியானம் என்றால் ஏதேனும் ஒன்றை மட்டும் நினைத்துக்கொண்டு அல்லது சொல்லிக்கொண்டு இருப்பது அல்ல நமது பேச்சினை நாமே கேட்பது அதாவது நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பயித்தியக்காரத்தனமான சப்தங்களை , இரைச்சல்களை கேட்டுக்கொண்டேயிருக்கவேண்டும். நாம் நமது மனம் என்னும் மாயாண்டியினுடைய பேச்சைக்கேட்க்க ஆரம்பித்து விட்டோம் எனில் மாயாண்டியை நாம் கவனிக்க ஆரம்பித்து விட்டோம் என்பது மாயாண்டிக்குத்தெரிந்துவிட்டால் மாயாண்டி தனது இயல்பு நிலையான மிகுந்த அமைதிக்குத்திரும்பிவிடுவார். அது வரை அவர் இடும் கூச்சல்களும் , சப்தங்களும், இரைச்சல்களும் ஏராளம். நமது மனம் என்னும் மாயாண்டியை பேசாமலிருக்கச்செய்வதே இந்த தியானத்தின் வேலை. மனம் அமைதியாகிவிட்டால் மற்றவை எல்லாம் கிட்டிவிடும். மாயாண்டியின் கட்டுப்பாட்டில் தான் நாம் அனைவருமே இயங்குகின்றோம். மாயாண்டியின் விளக்கம் - மாயா + ஆண்டி (மாயா - மாயை என்னும் அலைக்கழிக்கும் சக்தி, ஆண்டி - சிவம் என்னும் தியான ரூபம் - அமைதியின் வடிவம்) இருவேறுபட்ட நிலைகளின் சங்கம ரூபமே மாயாண்டி என்னும் மனம். சிலநேரங்களில் அமைதி பல நேரங்களில் குழப்பம் இதுவே மனம் என்னும் மாயாண்டியின் தத்துவம். நமது மாயாண்டியை சரணடைவோம் மாயா விழகி ஆண்டியிடம் வீழ்ந்து பற்றற்ற நிலை கேட்டு தவம் இருப்போம். தவம் என்பது கிடைக்கும் வரை காத்திருத்தல்.
அடுத்த பயணத்தின் போது சந்திக்கலாம்.