today

Monday, 14 November 2011

பற்றற்றிருக்க ஒரு வெட்டவெளித்தியானம்

பிண அறையில் வெட்டவெளியானின் தியானம்.
எனது நண்பன் ஒருவன் காலை நேரத்தில் வாக்கிங் செல்லும் போது இறந்து விட்டதாக தகவல் வந்தது.  அவனது பிரேதம் பரிசோதனைக்கு எடுத்துச்செல்லப்பட்டது என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை தியானத்தின் வாயிலாக தூரதிருஷ்டியில் பார்த்த போது. அவன் உடல் சவமாய் கிடக்கின்றது.  தூக்கி ஒரு பொருளைப்போல போடுகின்றனர்.  காதுக்கு அடியில் கத்தியை விட்டு லேசாய் அமுக்கி பின்னோக்கி ஒரு கோடு அடுத்த காது வரை இழுத்து தொப்பியை கழட்டுவதைப்போல தோலை உரித்து முகத்தை முதலில் மூடி விட்டார்கள். பின் தொண்டைக்கு அருகில் கத்தியை வைத்து லேசாய்க்கீரி தொப்புள் கீழ் வரை ஒரே கோடு நன்றாகப்பிளந்த பின் நெஞ்சுக்கூட்டுக்குள் கத்தியைச்செறுகி கூட்டுக்கடியில் இருந்ததை சுத்தமாக அறுத்து எடுத்து சித்தாள் சட்டியைப்போன்றதொரு சட்டியில் போட்டார்கள்.  இதோ அவன் சித்தாள் சட்டியில் சில ரத்தமும் கருப்புமாய் சதையுமாய் கிடக்கின்றான்.  இது அவனின் சவம்தான்.  இருப்பினும் அவன் என் நண்பன் என்ற உணர்வோடு பார்த்த போது ஏதோ ஒன்று சோகத்தையும் துக்கத்தையும் தந்தது.  பற்றோடு பார்ப்பதனால் ஏற்ப்பட்டது என்பது இப்போது புரிகிறது. அவனது நாக்கு எடுக்கப்படும் போது அந்த தொழிளாலி மிகுந்த சிரம்ப்பட்டுவிட்டார் அது ஒரு கடல் மீன் போல் இருந்தது மிக நீளமாய் உருண்டையாய் அதை நான் பார்த்தேன்.  அவனது மரணம் அவனது எல்லாவற்றையும் எடுத்துச்சென்று விட்டது.  அவன் நேசித்த அவனது சுற்றத்தார் உறவினர் நண்பர்கள் யாரும் அவன் சடலத்தைப்பார்க்க அஞ்சி அது ஒரு பிணம் என்ற பயத்தோடு அந்த சவத்தை அவனை பார்த்தனர்.  அவன் எப்போதும் நேசித்த ஜோதிட, ஆன்மீக புத்தகங்கள் அவனுக்காய் காத்திருந்தன இனி அவன் வரமாட்டான் என்பது அவைகளுக்குத்தெரியாது.  அவனது குடும்பத்தாரோடு இருந்ததைக்காட்டிலும் புத்தகங்களில் அவன் ஏதோ தேடியிருக்கிறான். நேரம் வெகுவாய் கழிந்துள்ளது ஏனெனில் அவன் அலமாரியில் ஏகப்பட்ட புத்தகங்கள்.  சில இன்னும் திறக்கப்படாமல் புத்தக பில்லோடு இருந்தது.  எனது குருநாதர் சொல்லும் போது படிக்காதே பழகு என்றுதான் சொல்லுவார். அவன் படித்ததோடு சரி எதனையும் பழகவில்லை.  அவன் உடல் அறுக்கப்பட்டது அறுக்கப்பட்டதாய் தான் கிடந்தது.  உள்ளே எட்டிப்பார்த்தால் வெட்டவெளிதான் இருந்தது. வெற்றிடம் மட்டுமே மிச்சம்.  இந்த உடலை வளர்ப்பதற்கு அவன் எதையெல்லாம் சாப்பிட்டிருப்பான்.  விலங்கினக்கழிவுகள், தாவரயினக்கழிவுகள் இன்னும் ஏதேதோ சாப்பிட்டு அவன் உடலை பாதுகாத்திருந்தான். விலங்கினக்கழிவுகள் - இரண்டு நாட்களுக்கு முன் அறுக்கப்பட்ட ஆடு, கோழி போன்றவற்றின் சடலங்கள் நாற்றம் வெளியே தெரியாத வண்ணம் நன்றாய் மசால் அறைத்து தேங்காயில் பாலெடுத்து வேகவைத்து தின்ற சடலம் இது. இறந்து போன கத்தறிக்காய், வாழைக்காய், தேங்காய், முருங்கைக்காய் , கீரைகள் போன்ற தாவர இன உயிரற்ற கழிவுகளையும் உண்டு வளர்க்கப்பட்ட தேகம் அது அந்த சவம்.  எனது தவ வலிமையால் அவன் ஆத்துமாவைத்தேடினேன் அவன் ஆக்சிடெண்ட் ஆன இடம் தேடிச்சென்றேன் எங்கேயும் அவன் இல்லை.  எங்கே சென்றது அவன் ஆன்மா எங்கு தேடியும் கிடைக்கவில்லை.  இதோ கண்டுபிடித்துவிட்டேன். ஒரு செடிக்கு அடியில் வேரின் நுனியில் அவன் ஆத்மா. அருகில் சென்று விசாரித்தேன் நீ என் நண்பன் தானே என்றேன் அவன் எதுவும் பேசவில்லை என்னைக்காணவே மிகுந்த பயம் கொண்டிருந்தான்.  நீ எப்படி என்னோடு பேசமுடிகிறது.  எனக்கு நான் யார் என்பதே தெரியாது. நீ என்னை ஏமாற்றுகிறாய் எனக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை. நீ இங்கிருந்து சென்று விடு. வீனாய் உன் பண்டிதத்தை என்னிடம் ஏற்றிவிடாதே. சென்றுவிடு இங்கிருந்து என வேண்டினான். நானும் கட்டாயப்படுத்தாமல் வந்துவிட்டேன்.  இறந்தபின் அந்த ஆத்மா உயிர் இந்த பிரபஞ்சத்தோடு கலந்து விடுகின்றது என்பதனை உணர்ந்தேன்.  அவனுக்கு எதுவும் ஞாபகத்தில் இல்லை.  அவன் பற்றற்று இருந்தான். உயிரோடு இருந்தபோது எல்லாமே என்னுடையது என் மனைவி, எனது குழந்தைகள், எனது சொத்து, எனது கார், எனது தோட்டம், எனது புத்தகங்கள்  எல்லாவற்றிலும் பற்றோடு இருந்தான்.  எனது மதம், எனது தெய்வம், எனக்கு பிடித்த கோயில், எனது குரு என்றெல்லாம் பறைசாற்றியவன்.  இப்போது சொல்கிறான் எதுவும் ஞாபகம் இல்லை எனக்கு ஞாபகசக்தியைக்கொடுத்து என்னை பண்டிதனாக்கிவிடாதே நான் எதையும் தெரிந்து கொள்ள விருப்பமில்லை என்முன் நின்று என்னை பிரெயின் வாஸ் செய்து விடாதே என்றான். ஆத்மாவுக்கு பிரெயின் இல்லை. என்பதை எனக்கு உணர்த்தினான். அடுத்த வெட்டவெளிப்பயணத்தின் போது சந்திக்கலாம்.  பற்றற்று இருக்ககவே இத்தியாணம்.  படிக்காதீர்கள் பழகுங்கள். தியானம் செய்ய.

1 comment:

  1. ஐயா உங்களை தொடர்புகொள்ள உங்களின் மின்னஞ்சல் தாருங்கள் எனது மின்னஞ்சல் san198820@gmail.com

    நட்புடன்
    தேவன்

    ReplyDelete