today

Wednesday, 16 November 2011

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

சாகாக் கலை - மரணமிலாப் பெரு வாழ்வு - முக்தி

(பற்றற்றே சொல்கிறேன்) உன் மரணத்தருவாயில் இன்னும் சில மணித்துளிகள் கடந்து நீ இறந்து விடுவாய் என்பது தெரிந்தால் மிகுந்த சந்தோசத்தோடு இரு. இதோ உனக்கு முக்தி கிடைக்கப்போகிறது என்பதில் நம்பிக்கையோடிரு. மிகுந்த சிரமப்பட்டு இறக்காதே. அய்யோ நான் இறக்கின்றேனே. இந்த உலகத்து இன்பங்கள் எல்லாவற்றையும் விட்டு விட்டுச்செல்கிறேனே என்று எண்ணாதே. எனது குடும்பம், குழந்தை, மனையாள், சொத்து, வாகனம், நண்பன், குரு நாதர், மேலும் பலவற்றைவிட்டுச்செல்கிறேன் என்று எண்ணவேண்டாம்.  எனக்கு முக்தி கிடைக்கும் அல்லது கிடைத்து விடும் என்ற பற்றோடு இராதே.  மரணம் என்பதின் இயல்பை நன்றாய் புரிந்துகொள்.  மரணம் என்பதை நன்றாகப்புரிந்து கொண்டு மரணம் என்பது இந்த உடல் உயிரைத்தாங்கும் வல்லமையை இழந்துவிட்டது.  இந்த உடல் சீரழிந்துவிட்டது சக்தியில்லாமல் போய்விட்டது என்பதை மட்டும் நன்கு உணர்ந்து கொண்டு.  உனது ஆத்மாவை, வெட்டவெளியை, உயிரை (மூன்றும் ஒன்றே பெயர்தான் வேறு).  நீயே வலுக்கட்டாயமாக வெளியே போகவிடு உனது உடலைப்பார் நன்றி சொல் இத்தனைக்காலம் இந்த உயிரைத்தாங்கிய உனது உடலுக்கு நன்றியைத் தெரிவி பின் இப் பிரபஞ்சத்தின் வெட்டவெளியோடு கலந்துவிடு.  இது உன் மன விழிப்புநிலையிலிருந்தால் தான் சாத்தியம்.  மரணத்தை மரணமாக ஏற்றுக்கொண்டுவிடு.  உன் மரணத்தை நீயே கொண்டாடு.  ஞாபகம் வைத்துக்கொள் "மனோ கல்பித ஜெகத்" மனமே சகலமும் நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய். எனவே நீ உன்னை வெட்டவெளி என்று மட்டுமே நினைத்து எப்போதும் தியானத்தில் இரு.  குருநாதர் எந்த வகையிலும் இந்த விசயத்திற்கு உதவிக்கு வரமாட்டார்.  குருநாதர் பாதையைத்தான் காண்பிப்பார் நீதான் முடிவெடுத்துச்செல்லவேண்டும்.  எனது வழிகாட்டுதல் எப்போதும் அன்போடு உனக்கு உண்டு (பற்றோடு இல்லை).  உனக்கு உள்மனதில் ஏதேனும் ஆசை அல்லது பற்று குறைபாடுகள் இருந்தால் உனது மறுபிறவிக்கு நீயே வித்திட்டாயென்று அர்த்தம். எனவே ஆசையோ பற்றோ இல்லாமல் உன் மரணத்தினை ஏற்றுக்கொள்.  அடுத்த வெட்டவெளிப்பயணத்தின் போது சந்திக்கலாம்.

1 comment:

  1. மூன்று முறை வாசித்தேன். சரியான புரிதல் கொண்டேன். /// உள்மனதில் ஏதேனும் ஆசை அல்லது பற்று குறைபாடுகள் இருந்தால் /// இந்த வரிக்கான புரிதல் இன்னும் நான் வளர வேண்டும் என்று கூறுகிறது. உங்கள் அருளுரைக்கு நன்றி.

    ReplyDelete