பேருந்தில் சென்று கொண்டிருக்கிறேன். சன்னலோர இருக்கை. பேருந்து சொகுசுப்பேருந்து. மிக மெது வாக ஊர்ந்து செல்லும் வகையைச் சார்ந்தது. வெறுமையான வெளிப்பார்வை. நான் முன்னோக்கிச்சென்றுகொண்டிருக்கின்றேன். ரோடு பின்நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றது. ரோடு வெறுமையாகத்தான் இருந்தது. அவ்வப்போது ஏதேனும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. வருவதும் போவதுமாய் ஏதேதோ பிம்பங்கள் வருவதும் போவதும் தெரிந்தது. ரோடு என்பது வெட்டவெளி அதில் வருவதும் போவதுமாய் இருப்பது மாயை. ரோடு மட்டும் கருப்பாய் மிக வழுவழுப்பாய் மின்னிக்கொண்டு வெறுமையாய் இருந்தது. நான் பார்த்ததைக்காட்டிலும் ரோடு என்னைப்பார்த்தது. ஏதோ ஒன்று உள்ளுக்குள் உணர்த்தியது. வெறுமையை நோக்கிய பயணத்தில் நான். இதோ இந்த புழுக்கூட்டுக்குள் சிக்குண்ட ஆன்மா வெட்டவெளியில் பயணித்துக் கொண்டுள்ளது என்பதை உணர்ந்து கொண்டே வெட்டவெளிப்பயணத்தில் நான். தூங்கிவிட்டேன். கண்டக்டர் திட்டினார். ஏம்யா மப்பா மயங்கிக்கிடக்கிற. தொந்தரவு பண்றதுக்குண்ணே வந்துட்டாம்யா. வெட்டவெளி என்னைக் கோபித்துக்கொண்டது. வெறுமையாய் சிரித்துக் கொண்டே இறங்கினேன். மன்னிச்சுடுங்கோ சார் சுகர் அதிகமாயிட்டுது அதான் மயக்கம். நன்றிங்கையா (என்னை வெட்டவெளியிலிருந்து மீட்டதற்க்கு). என்று படியைவிட்டு இறங்கினேன்.
No comments:
Post a Comment