today

Tuesday, 15 November 2011

பற்றற்றான் திருக்கோவில் தரிசனம்

பற்றற்றான் திருக்கோவில் தரிசனம்
வெட்டவெளி பயணி தரிசனம் செய்த பற்றற்றான் திருக்கோவில் - தரித்ரேஸ்வரர் ஆலயம். பிரபஞ்ச இருளில் இந்த பூமி என்னும் கிரகத்திற்கு அப்பால் சுமார் ஆயிரம் கோடி மைல்களுக்கு அப்பால் இந்த கோவில் உள்ளது. முதலில் இருளினை தியானம் செய்ய வேண்டும். தனியனாய், ஏகாந்தனாய், சுடுகாட்டின் அமைதியாய் எந்த வித மன சப்தங்களும் இல்லாமல் சவதியானத்தில் இந்த பூத உடலைவிட்டு ஆன்மா மெதுவாக வெளிக்கிளம்பி அடுத்த நொடியில் இந்த பூமி என்னும் கிரகத்தை விட்டு வெளியேறி சுற்றிலும் பார்வையை செலுத்த மிகப்பிரமாண்டமான இருள்வெளி எங்கும் அமைதி இதுவே பிரபஞ்ச இருள் இந்த இருளுக்குள் ஒரெயொரு ஒற்றைப்புள்ளியாய் வெண்மையாய் சிறு ஒளி தெரியும் அதனை பார்த்ததும் அடுத்த சில கனங்களில் அதன் அருகாமையை உணரமுடியும். இதோ தெரிகிறது தரித்ரேஸ்வரர் ஆலயம்.  எங்கும் மயான அமைதி யாரும் தரிசனம் செய்ய வராத இடம்.  மிகுந்த மனவலிமையும் தவ வலிமையும் பற்றற்றோருமே சென்று வர இயலும்.  மெதுவாக செல்ல ஆரம்பித்தேன் இருபுறமும் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகள், விலை மதிப்பில்லா வாகனங்கள், கார்கள், ஏரோபிளேன்கள், ஹெலிகாப்ட்டர்கள், இறந்து போன ஏதேதோ விலங்குகள், தாவரங்கள், அழுகிப்போன உடல்கள், பாலாய்போன கட்டிட இடிபாடுகளின் கல் மண் போன்ற பொருட்கள்,  ஏகப்பட்ட விலைமதிப்பில்லா வைரங்கள், தங்க நகைகள்,  எல்லா நாட்டு கரன்சிகள், நான் படித்த புத்தகங்கள், நான் பெற்ற சான்றிதழ்கள்,  நான் போற்றிப்பாதுகாத்த என் உயிர் போன்ற பொருட்கள் யாவும் குப்பையாய் கிடந்தது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே சென்றேன்.  எனது அப்பா, அம்மா, உறவினர் எனது குழந்தைகள், மனைவி என் சுற்றத்தார் அனைவரும் அழுகிய பினங்களாய் சிதறிக்கிடந்தார்கள் நான் பதறவில்லை மெது வாக சிறு புன்னகையோடு எதிலும் என் மனத்தை ஒட்டாமல் என் பாதையில் சென்று கொண்டிருந்தேன். அதாவது மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்தும் குப்பையாய் கிடந்தது, திடிரென ஒரு சப்தம் மிக மெல்லியதாய் அப்போது தான் அது விழுந்திருக்கக்கூடும் ஒரு அழகிய பெண்ணின் நிர்வான உடல் அழுகி நாற்றமெடுத்த நிலையில் நான் சென்ற பாதயில் குறுக்கே கிடந்த்தது சவதியானம் நான் பழகியிருந்ததால் அந்த சவத்தை சவம் சடலம் என்று உணர்ந்து அதனையும் கடந்தேன். படிக்கட்டுகள் மூன்று இருந்தது பார்த்ததும் கடந்தேன். மிகச்சிவப்பாய் ஒரு சதுர வெளிச்சம் (சந்தியாகால சூரியனைப்போன்ற ஒரு ஒளி மேடை சுமார் ஒருகிலோமீட்டர் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது) எங்கெங்கும் ஒளிவெள்ளம்.  எனது ஆன்மா பயணித்தது.  நடுவில் மிகப்பிரகாசமாய் தரித்ரேஸ்வரர் லிங்க வடிவில் மிகப்பிரகாசமாய்  ஆயிரம் சூரியன் சேர்ந்தாலும் அவ்வளவு வெண்மையான ஒளி எங்கும் காண முடியாது அப்படிப்பட்ட லிங்க ரூபமாய் தரித்ரேஸ்வரர் அங்கே இருந்தார். நான் அங்கு பலமுறை வலம் வந்தேன்.  எனது தரித்திரம் பற்று இன்றோடு ஒளிந்தது என என் உள்மன ஆற்றல் எனக்கு உணர்த்தியது.  உண்மையில் அங்கு யாருமே கிடையாது.  தனியனாய் ஏகாந்தனாய் தரித்ரேஸ்வரர்.  என்னையே நான் பார்த்துக் கொண்டது போல் இருந்தது அந்த தரித்ரேஸ்வரரின் ஒளிவெள்ளத்தின் ஊடாகக்கூட எனது ஆத்மா பயணிக்க முடிந்தது அப்படியானால் நான் எனது ஆத்மா வேறு பரமாத்மா வேறு என்றல்லவா நினைத்திருந்தேன் அது பொய் என உணர்ந்தேன் அங்கு பரமாத்மாவோடு எனது ஆத்மாவும் ஒன்றறக்கலந்தது முழு வெளிச்சத்தையும் என்னால் உணரமுடிந்தது சிறிது நேரம் தரித்ரேஸ்வரரின் ஒளிவெள்ளத்தில் தங்கினேன். பின் மெது வாய் பிரிந்தேன் எனது கர்மாவைச் செய்ய இப்பூமியெனும் கிரகத்தினுள் நுழைந்தேன். எல்லாம் அடுத்தடுத்த செகண்டுகளில் நடந்தது.  எல்லாம் கனவா அல்லது நினைவா தெரிய வில்லை.  கோவில் ஊழியர் தம்பி மணி இரவு 8.40  ஆகிவிட்டது மன்னிக்கனும் உங்களின் தியானத்தைக்கழைத்துவிட்டேன் எழுந்திருத்து வீட்டுக்குச்செல்லுங்கள் என்றார். எனக்குள் ஒரு பூரண அமைதிகிட்டியதென நான் உணர்ந்தேன்.  சிவன் கோவிலில் நான் அமர்ந்து தியானம் செய்தது சந்திரகாந்தக்கல் அந்தக்காலத்தில் அரசர்களால் கட்டப்பட்டது. சிறு குளிர்ச்சியுடன் இருந்தது.  பின் அவ்வப்போது இந்த தரித்ரேஸ்வரர் ஆலயத்திற்குள் தியானத்தின் மூலம் சென்று வர ஆரம்பித்தேன்.  முடிந்தால் நீங்களும் சென்று வரலாம் தியானத்தின் மூலமாக மட்டுமே.  எல்லாம் தியானமே.  வெட்டவெளிப்பயணியின் பயணம் தொடரும்.  அடுத்த தியானத்தில் சந்திப்போம்.  ஓம் தரித்ரேஸ்வராய நமஹா.

No comments:

Post a Comment