today

Friday 11 November 2011

திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்


திருமண மண்டபத்தில் வெட்ட வெளி தியாணம்
அன்று எனது உறவினரின் திருமணத்திற்க்குச் சென்றிருந்தேன். நான் சென்று சேரும் போது இரவு 11.00 மணியாகிவிட்டது, ஒரு பேனுக்கடியில் படுத்துத் தூங்கினேன். நள்ளிரவு நேரம் மணி 1.30 இருக்கும் திடீரென விழிப்பு ஏற்ப்பட்டது.  எழுந்து அமர்ந்து கொண்டேன். சினிமா தியேட்டரைப்போன்ற பிரமாண்டமான திருமண மண்டபம்.  யாரும் இல்லை அங்கங்கு உறவினர்கள் தூங்கிக்கொண்டிருந்தனர். சுமார் ஒரு இருபது பேர்கள் தான் இருந்தார்கள்.  மண்டபமே வெறிச்சென்று இருந்தது.  வெட்டவெளி தியாணம் உள்ளே பிரவேசிக்க ஆரம்பமாகியது.
யாருமற்று ஏகாந்தமாய் தனியனாய் இருக்கும் போது ஒரு அமானுஷ்ய அமைதி அதாவது சுடுகாட்டின் அமைதி திடீரென்று என்னைச் சூழ்ந்தது ஆஹா வந்து விட்டதய்யா வெட்டவெளி என்று எனக்குள் ஒரு உணர்வு.  வரிசையாகப்போடப்பட்ட சேர்கள், மணவறை மேடை முழு அலங்காரத்தில் இருந்தது. காலை 6.30 க்கு மேல் முஹூர்த்தம்.  சுமார் 800 பேர்கள் அம்ர்ந்து பார்க்கும் வசதி.  யாருமற்று இப்போது இருந்தது.  கார் பார்க்கிங் ஏரியா சுமார் 100 கார்கள் நிற்கும் அளவுக்கு இருந்த இடத்தில் இப்போது 3 கார்கள் தான் இருந்தது.  எங்கும் வெட்டவெளி கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்த அசைவும் இல்லை.  இதுவே நமது வெட்டவெளி அந்த காட்ச்சியை அப்படியே உள்வாங்கிக்கொண்டேன்.  விடிய ஆரம்பித்தது.  கொஞ்சம் கொஞ்சமாய் மக்கள் கூட்டம் வர ஆரம்பித்தது.  முஹூர்த்தமும் சிறப்பாய் முடிந்தது.  இப்போது மண்டபமே கடும் கூட்டமும் கூச்சலுமாய் இருந்தது.  எப்படி இருந்த இடம் இப்படி ஆகி விட்டது. மதியம் 3.00 மணி மீண்டும் வெட்டவெளி உள்ளே புகுந்தது.  மண்டபத்தில் அலங்கோலமாய் சேர்கள், பணியாளர்கள் சேர்களையெல்லம் அடுக்க ஆரம்பித்தார்கள்.  சுவர் ஓரமாய் அடுக்கிவிட்டார்கள், கூட்டும் பெண்கள் மண்டபத்தை பெருக்க ஆரம்பித்தார்கள்.  குப்பைகள் எல்லாம் வெளியேற்றப்பட்டன.  இப்போது மண்டபமே வெறிச்சோடியிருந்தது.  எங்கும் வெட்டவெளி பரவியிருந்தது.  கார்பார்க்கிங் ஏரியாவில் எதுவும் இல்லை.  எங்கும் வெட்டவெளி.  காணவே மிகப் பயங்கரமாய் இருந்தது.  எங்கும் எந்த சப்த்தமும் இல்லை இதையும் உணர்ந்தேன்.  விழிப்பு நிலையில் இருக்கும் போது கூட வெட்டவெளி மிகப்பயங்கரமாய் இருந்தது.  சிறிது நேரம் இதனை ரசித்து அச்சத்துடன் தியாணத்தில் இருந்தேன்.  மாலை வேளையில் இந்த மண்டபம் லைட்டுகள் ஏதும் இன்றி எப்படி இருக்கும் என்பதையும் பார்த்து விட்டுச்செல்ல மனம் சொன்னது.  இருந்தேன்.  ஒரேஒரு லைட்டுமட்டும் போடப்பட்டு மிகவும் படுபயங்கர வெட்டவெளியாய் காட்சி தந்தது.  மரணம் எப்படி இருக்கும் என்பதை உணரவேண்டுமானால் அது இது வாகத்தான் இருக்கும் ஏனென்றால் நான் மரணித்த பின் எனது சவம் எடுத்துச்செல்லப்படும் போது எனது ஆன்மா ஏகாந்தமாய் தன்னந்தனியனாய் பயணிக்கும் இந்த வெட்டவெளியில் எனக்கு ஏதேனும் பற்று இருக்குமானால் 87 ஆயிரம் யோனிபேதங்களில் ஏதேனும் ஒன்றில் இந்த ஆன்மா புகும், புகுந்து மீண்டும் பிறக்கும், பிறந்தால் இறக்கும் , இறந்தால் பிறக்கும்.
யோனியிலிருந்து யோனிக்குப்பயணம் செல்லும் ஆன்மா.  மிகக்குறைந்த நேரமே வெட்டவெளியில் பயணிக்கிறது.
மீண்டும் அடுத்த வெட்டவெளிப்பயணத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment