எனது மகனின் பள்ளிக்குச்சென்றிருந்தேன் -
வெறுமையான பார்வையோடு பிளே கிரவுண்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதாவது சும்மா பார்ப்பது. எந்த வித ஈடுபாடும் இல்லாமல் பார்ப்பது. எந்த வித எண்ணங்களின்றி பார்ப்பது. மாணவர்கள் மாணவிகள் எல்லோரும் விளையாண்டு கொண்டிருந்தனர். விளையாட்டுச்சித்தனின் பாடலில் வாழ்க்கையே விளையாட்டுத்தான் எல்லாம் விளையாட்டே என்று அவர் பாடலில் அடிக்கடி வரும். ம். எல்லாம் விளையாட்டே.
இதோ இங்கு வெட்டவெளியாய் பிளே கிரவுண்டு. எப்போதும் வெட்டவெளியாய்த்தான் இருக்கும் யாராவது விளையாடினால் அங்கு சில பிம்பங்களாய் கலர்கலராய் இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தது சில விளையாடும் மாணவ மாணவியரின் பிம்பங்கள். ஏதோ உள்ளுக்குள் உணர்த்தியது. எங்கும் வெட்டவெளி தெரிகிறது. எதிலும் எதுவும் இல்லை. மயங்கிப்போனேன் தூங்கிவிட்டேன். சிறிது நேரத்தில் எனது மகன் வந்து எழுப்பிவிட்டான். அப்பா , தூங்கிட்டீங்களா, எழுந்திருங்க, வீட்டுக்குப்போகலாம். கர்மா என்னை அழைத்தது. வீட்டிற்குச்சென்றவுடன் அவன் அம்மாவிடம் போட்டுக்கொடுத்திட்டான். அப்பா தூங்கிட்டாரும்மா நாந்தான் எழுப்பினேன். அவரொரு தூங்கு மூஞ்சி எப்போதும் தூங்கிவிடுவார். அவர்களுக்குத் தெரியாது இன்று வரை நான் வெட்டவெளிப்பயணத்திலிருக்கிறேன் என்று. விரைவில் அவர்களும் என் பின் வருவார்கள். யாரும் கட்டாயமாக வெட்டவெளிப்பயணத்திற்குள் நுழைய இயலாது. முன் பிறவி தவம் இருக்க வேண்டும். சிறிது புரிதலும் இருக்க வேண்டும்.
வெட்டவெளிப்பயணியின் பயணம் தொடரும்.

No comments:
Post a Comment