today

Friday 11 November 2011

இறப்பு , அர்த்தம் , கற்றல்- சவ தியாணம்

மரணத்தை வெல்லும் தியானம்
இது சற்று பலசாலியான தைரியமான மனம் உள்ளவர்கள் மட்டும் செய்யும் தியானம். நான் இந்த தியானத்தில் இருந்திருக்கிறேன். அவ்வப்போது செய்தும் வருகிறேன். வெட்டவெளியில் பயணம் செய்து கொண்டிருந்த போது திடீரென நான் இறந்து விட்டேன். எனது உடலைவிட்டு இந்த உயிர் (ஆன்மா) பிரிந்து விட்டது.  ஆனால் நான் விழிப்புநிலையில் தான் இருந்தேன்.  இந்த ஆன்மா என்றும் அழியாதது.  எனது உடல் ஆழ்ந்த உறக்க நிலையில் சவமாய்க்கிடந்தது. எனது ஆன்மா வீட்டினுள் எனது உடலறுகே சும்மா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.  இந்த சூட்சும சரீரம் ஆன்மா மட்டும் உடையது வெண்மையான ஒளி ரூபமாய் இருந்ததையும் பார்த்தேன், இங்கு சவம், ஒளி உடல் ஆன்மா, விழிப்புநிலை எண்ண அலை ஆகிய அனைத்தும் ஒருங்கே எனது உடலறுகே என்ன நடக்கப்போகிறதோ என காத்திருந்தது.  ஆன்மீகத்தின் மிக உயர்ந்த உன்னத நிலை வைராக்கிய நிலை காத்திருத்தல் தான்.  காத்திருத்தல் என்பது தவம். தவம் என்பது காத்திருத்தல் தான்.  காத்திருத்தலின் எதிரி மனப்பாங்கு அலுப்பு தட்டுதல்.  அலுப்பு இருந்தால் ஆன்மீக பயணம் தடைபடும். எனவே அலுப்பு இல்லாமல் காத்திருத்தல் அவசியம்.  காலை 7.30 எனது மூத்த மகன் வந்து எழுப்பினான் அப்பா எழுந்திருங்க இன்னைக்கு லீவா லேட்டாகிவிடப்போகுது எழுந்திருங்கப்பா ? எனச்சொன்னான் இது எனது சூட்சும சரீரத்திற்கு கேட்டது ஆனால் சவத்திற்கு கேட்க வில்லை.  இரண்டாவது மகன் வந்தான் என் மீது ஏறி மிதித்து விளையாண்டு என்னை இந்த சவத்தை எழுப்ப முயற்ச்சித்தான். இந்த சவம் சவமாகவே கிடந்தது.  இறுதியில் எனது மனைவி வந்து இந்த சவத்தை பார்த்ததுமே கண்டு பிடித்து விட்டாள். உயிர் இல்லை உடல் சில்லென்றாகிவிட்டது.  என்ன செய்வது என்று தெரியாமல் எனது மாமனாரை அழைத்து வந்து பரிசோதித்து முடிவு செய்தார்கள் நான் இறந்து விட்டதை.  எனது குடும்பத்தாறும் உறவினர்களும் தெருவினரும் ஊர்க்காரர்களும் எனது அம்மா அப்பா ஏன் இந்த பிரபஞ்சமும் சோகமயமாக காட்ச்சி தந்தது.  சூட்சும சரீரம் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது.  என் மீது இத்தனை பேரும் இவ்வளவு அன்பு வைத்துள்ளார்கள் என்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.  சவத்தை எடுக்க யாருக்கும் மனமில்லை குடும்ப டாக்டரும் வந்து பரி சோதித்து விட்டு உறுதி செய்தார்.  முடிந்து விட்டது.  வீடு இளவு வீடாகிப்போனது. பாடைகட்டி சங்கு ஊதி மணிஅடித்து பஞ்சாயத்து போர்டுக்கும் சொல்லியாகி விட்டது.  சவத்தை தூக்கி குழிப்பாட்டி பாடையிலே எடுத்து அலங்கார வண்டியிலே எடுத்துச்செல்கிறார்கள். சவ ஊர்வலம் சென்று கொண்டிருக்கிறது.  எனது மகன் அழுத வண்ணம் கையிலே தீச்சட்டியோடு தெருவழியாகச்சென்று ரோட்டினையடைந்து சுடுகாட்டுக்குச்சென்று கொண்டிருக்கிறான் எனக்கு இன்னும் உணர்வு வரவில்லை வெட்டவெளிப்பயணத்திலிருந்து மீள யாரிடமும் நான் சொன்னதுமில்லை நான் சமீபகாலமாக வெட்டவெளிப்பயணத்திலிருக்கிறேன் என்று. எனது சூட்சும சரீரமும் இறுதி ஊர்வலத்தில் எனது சின்ன மகன் அருகே சென்று கொண்டிருந்தது.  சின்னவன் எப்போதும் போல சந்தோசமாய் விளையாண்டு கொண்டும் சிரித்துக்கொண்டும் என்ன என்று தெரியாமல் அப்பாவை எங்கு கூட்டிட்டுப்போறீங்க என்று உறவுக்காரரை கேட்டுக்கொண்டிருந்தான் அவர் யார் என்றே எனக்குத்தெரியாது அவர் கண்கள் முழுவதும் நீர் ஊற்று பெருகி தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுது கொண்டே சொன்னார் உன் அப்பா திரும்பிவரமுடியாத இடத்துக்குச்சென்று விட்டாரப்பா.  பகவானின் கணக்கில் கோளாறோ.  இது போன்ற மகன்களைவிட்டுவிட்டு சென்றுகொண்டிருக்கிறான் உன் தகப்பன்.  சின்னவன் சொன்னான் என் அப்பா எங்குசென்றாலும் என்னையும் கூட்டிக்கிட்டுத்தான் போவார் என்னைத்தனியாக விட்டிட்டு போகமாட்டார்.  உங்கள் செல் போனைத்தாருங்கள் நான் என் அப்பாவிடம் பேசுகிறேன் என்று கேட்டு வாங்கி எனது எண்ணிற்க்குத் தொடர்பு கொண்டான். எனது செல்போன் கூப்பிட்டது என்னை உடனே எனது சூட்சும சரீரம் செல்போனை நோக்கிப்பறந்தது அங்கே என் மனைவி அழுது புலம்பிய வண்ணம் எனது செல்போனை எடுத்து சிகப்பு பட்டனை அழுத்தினாள் துக்கம் தொண்டையை அடைத்த வண்ணம் யார் கூப்பிட்டார்கள் என்று பார்க்கவில்லை.  எனக்கு இப்போதுதான் புரிந்தது நான் இரண்டு நாட்களுக்கு மேல் உடலை விட்டுப்பிரிந்து வெட்டவெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறேன் என்பது எல்லாம் கனவா அல்லது நினைவா எனத்தெரியவில்லை. அடுத்த செகண்டு எனது உடலைத்தேடி சுடுகாட்டுக்குப்பயணமானேன்.  அப்போது தான் சவத்தை இறக்கி வைத்தார்கள்.  உடம்பினுள்ளே புகுந்து விட்டேன். சிறிது அசைவு என் உடலிலே தெரிந்தவுடன் எல்லோரும் பயந்து ஏய் சவம் அசையுதுடா ஓடு ஓடு என்று ஓடியே விட்டார்கள் எனது சின்னமகன் வந்தான் ஓடி வந்து என்னை அணைத்துக்கொண்டான். பெரிய மகன் என்னை பார்த்து ஓ வென்று அழுதான்.  மாமனார் சற்று ஓரமாய் மிகவும் இறுகிய முகத்தோடு ஒரு பார்வை பார்த்தார்.  எனது அப்பா கேட்டார் என்னப்பா ஒன்றும் ஆகவில்லையே என்று.
நான் எழுந்தேன் பூமாலையோடு நெற்றி முழுவதும் பூசப்பட்ட சந்தனம் விபூதி குங்குமம் ஒற்றை ரூபாய் நாணயம். இத்தோடு எழுந்தபோது ஒருவன் செல்போனிலே படம் பிடித்தான்.  இந்த சவம் சவமாக இன்னும் நாட்கள் இருக்கின்றது என்பதைத்தெரிந்து கொண்டேன்.  வெட்டவெளிப்பயணிகள் நிச்சயம் வீட்டில் யாரிடமாவது சொல்லிவிட்டு பயணத்தை செய்யுங்கள்.  இல்லையேல் மரணித்து விடுவீர்கள்.  உங்களின் பூத உடல் எரிக்கப்பட்டுவிடும்.  மீண்டும் அடுத்த வெட்டவெளிப்பயணத்தில் சந்திப்போம்.  முக்கிய குறிப்பு இது உண்மைச்சம்பவம் அல்ல தியானம் மட்டுமே.

3 comments:

  1. ஐயா நான் உங்களுடைய உபநிஷத் படித்தேன்.
    உபநிஷத் (அருகில் வந்து அமர்ந்தேன்)

    ReplyDelete
  2. அவர் யார் என்றே எனக்குத்தெரியாது அவர் கண்கள் முழுவதும் நீர் ஊற்று பெருகி தாரை தாரை யாக கண்ணீர் விட்டு அழுது கொண்டே சொன்னார் உன் அப்பா திரும்பிவரமுடியாத இடத்துக்குச்சென்று விட்டாரப்பா😭

    ReplyDelete